Skip to product information
1 of 2

வசந்தம் வெளியீட்டகம்

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு

தமிழகத்தில் சமூக சீர்திருத்தம் இரு நூற்றாண்டு வரலாறு

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

திராவிட இயக்கம் பற்றிய ஆய்வில் எங்கோ ஒரு முக்கிய ஊனம் இருப்பதாகப் பட்டுக் கொண்டேயிருந்தது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் துவங்கிய இந்த இயக்கத்தை அதற்கு முந்தைய நூற்றாண்டுத் தமிழர் வாழ்வை உள்வாங்கிக் கொள்ளாமல் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று தோன்றியது. 19ம் நூற்றாண்டின் சமூக சீர்திருத்தம் குறித்து படிக்க ஆரம்பித்தேன். இதற்கான நூல்களைத் தேடிப்பிடித்து அவற்றிலிருந்து குறிப்புகளை எடுக்கத் தொடங்கினேன்.

அது ஒன்றும் அவ்வளவு இலேசான காரியமாக இருக்கவில்லை. உதவிய நூல்களின் பட்டியல் இந்த நூலின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்தாலே தெரியும் இவற்றைச் சேகரிப்பதிலும், படிப்பதிலும் எவ்வளவு காலம் செலவாகியிருக்கும் என்று. அதுமட்டுமல்ல, ஒவ்வொரு சமூக சீர்திருத்தவாதியையும் புரிந்து கொள்ளவும், ஒரு மதிப்பீட்டிற்கு வரவும்கூட நெஞ்சுக்குள் சிறிதுகாலம் அசைபோட வேண்டியிருந்தது. உதாரணமாக, வள்ளலார் பற்றி சிந்திக்க சிந்திக்க புதுப்புது பரிமாணங்கள் கிட்டின. அதுவொரு விசித்திரமான அனுபவமாக இருந்தது. எனினும், ஒரு கட்டத்தில் தைரியமாக சமூக சீர்திருத்தம் எனும் மாகடலுக்குள் குதித்துவிட்டேன். குதித்து நான் கொண்டு வந்துள்ள இந்தப் படைப்பு முத்தா அல்லது வெறும் சிப்பியா என்பதை வாசகர்கள்தாம் தீர்மானிக்க வேண்டும்.

மேலும் ஒரு விஷயம். திராவிட இயக்கத்தைப் புரிந்து கொள்ளத்தான் இதைத் துவக்கினேன். ஆனால், அப்படியாக மட்டுமே முடிந்திடவில்லை. தமிழகத்தின் இரு நூற்றாண்டுகால வரலாறாகவும் இது அமைந்துபோனது. வரலாறு என்பது என்ன? ஆட்சியாளர்களின் கால வரிசைப் பட்டியலா? இல்லை! அதையும் விட அகண்டமானது. சமூக மாற்றங்களின் தொகுப்பே சாராம்சத் தில் வரலாறு. மதவெறியர்கள் வரலாற்றை தங்கள் இஷ்டத்திற்கு வளைக்க முயலும். இந்த வேளையில் இந்த நூல் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. இன்னொரு வகையில் பார்த்தால் 21ம் நூற்றாண்டுக்கான காணிக்கை என்றும் கூறலாம்.


View full details