சுயமரியாதை - ஒரு நூற்றாண்டின் சொல்!
சுயமரியாதை - ஒரு நூற்றாண்டின் சொல்!
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
'பிரிட்டனைச் சேர்ந்த எழுத்தாளர், மார்க்சியச் சிந்தனையாளர், யார்க்சயர் 'அப்சர்வர்' என்னும் ஏட்டின் செய்தியாளர் 'கிறிஸ்டோபர் காட்வெல், தன்னுடைய தோற்றமும் உண்மையும் (Illusion and reality) என்னும் நூலில் ஓர் அழுத்தமான கருத்தை வெளியிட்டிருப்பார். ஒரு சொல்லுக்குப் பின்னால் ஒரு சமூகத்தினுடைய வரலாறு உறைந்திருக்கிறது" என்பது அவர் கூற்று ஆம்! சுயமரியாதை என்பது வெறுமனே ஒரு சொல் அன்று; அது ஒரு நூற்றாண்டின் சொல்!
சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றையும், சமூகத்தில் அதன் தாக்கத்தையும் புதிய தலைமுறைக்குச் சுவைபடச் சொல்லும் நூல் இது. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் திராவிட இயக்கம் பற்றியும் தந்தை பெரியார் பற்றியும் சுவாரசியமாக உரையாடும் பேராசிரியர் சுப.வீரபாண்டியன் நக்கீரன் இதழில் எழுதிய தொடரே இப்போது நூலாகியுள்ளது. சமூக நீதியை நிலைநிறுத்துவதற்காக தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் உள்ளிட்ட சமூகக் கொடுமைகளுக்கு எதிராகத் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய தந்தை பெரியாரின் பல்வேறு நிலைப்பாடுகளைப் பற்றியும் இந்நூலின் அத்தியாயங்களில் சுருக்கமாகக் கூறியுள்ளார் ஆசிரியர் சுப. வீ.
ஆனால், கூறலின் தன்மை காரணமாக அந்த வரலாற்றை விரிவாக அறிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல் வாசகருக்கு ஏற்படும் என்பது திண்ணம். கடவுள் மறுப்பு, சாதி மறுப்பு போன்ற விஷயங்களின் பின்னணியில் புதைந்துள்ள அம்சங்களை எளிய நடையில் புரியும் வகையில் எடுத்து வைத்துள்ளார் பேராசிரியர். திராவிட இயக்கம் பற்றிப் பரவலாக எழுப்பப்படும் பல கேள்விகளுக்கு விடையளிக்கும் விதமாக இந்நூல் அமைந்துள்ளது என்பதே இந்த நூலைத் தனித்துக் காட்டுகிறது.