Skip to content

சுயமரியாதை இயக்கம் வரலாறு - பாகம் 2

Save 20% Save 20%
Original price Rs. 800.00
Original price Rs. 800.00 - Original price Rs. 800.00
Original price Rs. 800.00
Current price Rs. 640.00
Rs. 640.00 - Rs. 640.00
Current price Rs. 640.00

சுயமரியாதை இயக்கம் வரலாறு - பாகம் 2 - க. திருநாவுக்கரசு

******

தமிழ்நாட்டில் மதத்தால் இறுகக் கட்டப்பட்ட சிறுமைகளான, வருண வகுப்பு பேதத்தை அதனால் விளைந்த தற்குறித்தனத்தை பொருளாதார சுரண்டலால் ஏற்பட்ட ஏழ்மையை உடைத்து, தமிழர்களை விடுவிக்க வந்த பேரொளியாம் பெரியார் தொடுத்த சுயமரியாதை இயக்கம் எனும் போரை உணர்ச்சியோடும், உக்கிரத்தோடும் தேர்ந்த மேற்கோள்களைக் கொண்டு, ஆவணப்படுத்தியிருக்கிறார் நூலாசிரியர்

திராவிட இயக்க ஆய்வாளர்களில் இவருக்கு இணையாக இன்னொருவரை கூற இயலவில்லை என்று முடிவுக்கு வருவதில் தயக்கம் கொள்ள முடியாதளவிற்கு சிறந்த சிந்தனையாளராகவும் - எழுத்தாளராகவும் திகழ்கிறார் ஆய்வறிஞர் திரு க திருநாவுக்கரசு என்பதை தமிழகம் ஏற்கும்.

பெரியாருக்குப் 'படைக்கப்பட்ட' அண்ணாவின் அரசும் பெரியார் கொள்கைகளை 'அரியணையேற்றிய' முத்தமிழறிஞர் கலைஞர் அரசும், சுயரிமயாதை இயக்கம் சமைத்த பாதையில்தான் பயணித்தன. அதன் தொடர்ச்சியாக இன்றைய 'திராவிட மாடல்' ஆட்சியின் நாயகர் மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களின் அரசும், அந்த பாதையைச் செப்பனிட்டு பேணி, தொடர் பயணம் மேற்கொண்டு வருகிறது. அந்த பாதையைச் சேதப்படுத்தி, சிதிலமடையச் செய்ய சில பாசிச சக்திகள் முயற்சிக்கும் இவ்வேளையில், அதனை முறியடிக்கும் ஆயுதங்களில் ஒன்றாய் 'சுயமரியாதை இயக்க வரலாறு (1925-1944) 1 - II' எனும் இந்நூல்கள் தமிழ்ச் சமுதாயம் கைகளில் ஏந்தட்டும்!

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.