சோசலிசமும் சமூக நீதியும்
மாசிலாமணி தருமபுரி மாவட்டத்தில் பிறந்தவர். இயந்திர பொறியியல் இளங்கலை பட்டம் பெற்று, நிலக்கரி நிறுவனத்தின் பொறியாளராக பணியாற்றி தற்போது நாகை மாவட்டத்திலுள்ள அரசு பாலிடெக்னிக் கௌரவ விரிவுரையாளராக பணி புரிகின்றார். சமூக விழிப்புணர்வு போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார்.
நம் பாரத நாட்டில் 125 கோடி மக்கள் வாழும் பிரதானமாக விவசாயத்தொழிலை கொண்ட நாடாகும். நம் மக்கள் கடுமையான உழைப்பாளிகள் தன் மானம் மிக்க தேசப்பற்று மிகுந்தவர்கள். தொழில் துறையில் சுதந்திரம் பெற்று பல ஆண்டாகியும் பின் தங்கிய நிலையில் உள்ளோம். எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் வந்தாலும் மேற்கண்ட கொடுமைகள் போதிய அளவுக்கு மாறவில்லை. மாநில உரிமைகள் மறுக்கப்படுகின்றன. இதற்கு புதிய மாற்றங்கள் நிறைந்த சித்தாந்தம் தேவைப்படுகின்றன. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் பாட்டாளி அடிப்படையாக கொண்ட சோசலிச சித்தாந்திற்கான விளக்கவே இந்நூல் எழுதப்பட்டுள்ளது.