சிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்
சிங்காரவேலு தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாண்டு, இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டாகும். சிங்காரவேலு 1925இல் கான்பூரில் நடைபெற்ற முதல் கம்யூனிஸ்ட் மாநாட்டின் தலைவர், தென்னிந்தியாவில் கம்யூனிஸ்டுக் கருத்துக்களைப் பரப்பிய மூலவர்
அவர்.
ஐந்தாண்டுகளுக்கு முன்னர் 1917-1924 வரை தமிழ் பத்திரிகைகளில் லெனினைப் பற்றி வெளியான கருத்துக்களைத் தேடி எடுப்பதில் நாங்கள் சில தகவல்களைச் சேகரித்தோம். அப்போது நாங்கள் பார்த்த பத்திரிகை இதழ்களில் அந்நாட்களில் சிங்காரவேலுவின் பணிகளைப் பற்றிய செய்திகள் பலவற்றைக் காண முடிந்தது. தென்னிந்தியாவில் கம்யூனிசத்தைப் பரப்பிய முன்னோடி என்பதைப் பற்றி நாங்கள் அறிந்ததைத் தவிர அவரது தொண்டைப் பற்றி மேலும் பல விஷயங்கள் இருந்தன என்பதைக் கண்டோம். சற்று தீவிரமாக முயன்றால் சிங்காரவேலுவைப் பற்றி ஏற்கனவே வெளிவந்திருந்த ஒருசில கட்டுரைகளிலுள்ளவற்றைவிட விரிவான விவரங்களைக் | கொண்ட ஒரு சிறு படைப்பை வெளியிடலாம் என்று எங்களுக்குத்
தோன்றியது.
"இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைப் பற்றிய ஆவணங்கள்” என்ற ஆங்கிலமொழி நூலுக்குத் தோழர் டாக்டர் அதிகாரி செய்துவந்த பெரும்பணி எங்கள் முயற்சியைத் தொடர்ந்து நடத்த எங்களுக்கு ஊக்கம் தந்தது. அவரும் எங்களை ஊக்குவித்து இப்பணியைத் தொடர்ந்து செய்யும்படி கூறினார். அது மேலும் பல விஷயங்களைப் பொறுமையுடன் தேடி எடுப்பதற்கு எங்களை உற்சாகப்படுத்தியது.
சிங்காரவேலுவின் பணி இடைவிடாத ஈடுபாடு கொண்ட பணி என்ற தனிச்சிறப்பு எங்கள் மனதில் ஆழப் பதிந்தது. அவருடைய கம்யூனிஸ்டுக் கருத்துக்களை அவர் செயலாற்றிய எல்லாத் துறைகளிலும் தொழிலாளி வர்க்கப் போராட்டங்களிலும்,