Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

சாதியற்ற தமிழர் சாதியத் தமிழர்

Original price Rs. 80.00 - Original price Rs. 80.00
Original price
Rs. 80.00
Rs. 80.00 - Rs. 80.00
Current price Rs. 80.00

இந்தியத் துணைக்கண்டத்தின் சமூகச்சிக்கலின் அடிப்படையான வடிவங்களில் முக்கியமானது சாதியம் என்ற அக மற்றும் புறநிலை எதார்த்தம். சாதியத்தை ஒழித்து சாதியற்ற சமத்துவ சமூகம் அமைக்க உணர்ந்து செயல்படும் சிந்தனையாளர்களும் செயற்பாட்டாளர்களும் சாதியத்தின் இருப்பை உணர்கிற அதே நேரத்தில் சாதியத்தின் தகர்ப்பிற்கு , சாதியற்ற சமூகம் எப்படி சாதியச்சமூகமாக உருமாறியது என்ற பின்புலத்தையும் அதன் அசைவியக்கத்தையும் அறிந்து கொள்வது மிக அவசியம். சிறுத்த உருவமும் செறிந்த உள்ளடக்கமும் கொண்ட இந்த நூல் தமிழ்ச்சூழலில் சாதியற்ற சமூகம் இயங்கியதையும் அது மெல்ல மெல்ல சாதியத்தின் முந்து வடிவத்தை அடைந்ததையும் இயங்கியல் அடிப்படையில் நமக்கு விளக்குகிறது.

சாதி பற்றி ஏராளமான ஆய்வுகள் வந்துள்ளன.இன்னும் வந்து கொண்டேயிருக்கின்றன. அனைத்திந்திய அளவிலும் தமிழ்மண்ணிலும் அதன் தோற்றுவாய் குறித்து இன்னும் நுண்ணிய ஆய்வுகள் தேவைப்படுகின்றன. இச்சிறுநூல் அத்திசையில்ஒரு முக்கியமான முன்னெடுப்பை நிகழ்த்துகிறது. தமிழ்ச்சமூகத்தில் இயங்கும் சாதியத்தின் அகக்கட்டுமானத்தை இந்நூலில் மானுடவியல் அறிஞர் தோழர் பக்தவத்சல பாரதிகட்டுடைத்துப் பார்க்கிறார். சாதியற்ற 'குடிச்சமூகமாக' இருந்து சாதிக்கு அருகாமையில் வந்து நின்று பின் செங்குத்துப் படிநிலைகளோடு கூடிய சாதியாக மாறிய தமிழ்ச்சமூகத்தின் அகவரலாற்றை இந்நூல் தரவுகளோடு விளக்குகிறது. பிராமணியக்கோட்பாடு மட்டுமின்றி, பொருளியல் கட்டமைப்பு எவ்விதம் சாதியத்தின் தோற்றத்துக்கு
ஒரு முக்கிய காரணியாக விளங்கியது என்பதையும் இந்நூல் விவாதிக்கிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.