ஜாதியை அழித்தொழிக்கும் வழி
ஜாதியை அழித்தொழிக்கும் வழி
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
“ஜாதியை அழித்தொழிக்கும் வழி” என்னும் இந்நூல் 1936 ஆம் ஆண்டு லாகூர் ‘ஜாத் – பட் – தோடக் மண்டல்’ என்ற அமைப்பு ஏற்பாடு செய்திருந்த மாநாட்டிற்காக டாக்டர் அம்பேத்கர் அவர்களால் தயாரிக்கப்பட்ட ஆனால் பேசப்படாத உரை. இம்மாநாட்டுக்கு தயாரித்த உரை, மாநாட்டு வரவேற்புக் குழுவுக்கு ஏற்புடையதாக இல்லாததால், இக்கூட்டத்தையே ரத்து செய்துவிட்டது. சாதிதான் இந்துக்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை. இந்துக்கள் இந்த தேசம் முழுவதையும் சாதி அமைப்பால் மாசுபடுத்திவிட்டார்கள். சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் ஆகிய எல்லா மதத்தினரிடமும் இந்த சாதி நோய் தொற்றிக் கொண்டுவிட்டது. எனவே, சீக்கியர்கள், முகமதியர்கள், கிறித்துவர்கள் உட்பட இந்தத் தொற்றுநோயால் பீடிக்கப்பட்டுள்ள எல்லாத் தரப்பினரிடமிருந்தும் நீங்கள் ஆதரவு பெற முடியும். சுயராஜ்யத்தை அடைவதற்கான போராட்டத்தில் தேசம் முழுவதும் உங்கள் அணியில் திரண்டும் நிற்கிறது. சாதி ஒழிப்புப் பிரச்சனையிலோ, நீங்கள் தேசம் முழுவதையும் எதிர்த்து நின்று அதுவும் உங்கள் சொந்த இந்திய தேசத்தையே எதிர்த்து நின்று போராட வேண்டி இருக்கிறது. ஆனாலும்கூட, சாதி ஒழிப்பே சுயராஜ்யத்தை விட முக்கியமானது. பெரியார் வெளியிட்ட இந்நூலின் தமிழ்ப் பதிப்பே இந்திய மொழிகளில் வெளியான முதல் பதிப்பாகும் என்பதையும் நாம் குறிப்பிட வேண்டும்.