புதுமைப்பித்தன் கதைகள்:புதுமைப்பித்தன்
புதுமைப்பித்தன் கதைகள்:புதுமைப்பித்தன்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
புதுமைப்பித்தன் கதைகள்
தொன்மையான இலக்கியம், இலக்கணம் ஆகிய மரபுகளைக் கொண்டது தமிழ்மொழி. இதனால் உலக இலக்கிய மரபோடு நமது மொழி இணைந்து கொள்கிறது. செவ்வியல் மரபில் உள்ள இந்த வளம், நவீனப் புனைவு - மரபிலும் தமிழில் உண்டு என்பதற்கான அடையாளம்தான் புதுமைப்பித்தன். 193-195 இடைப்பட்ட தமிழ்ப் புனைவு மரபின் முதன்மையான ஆளுமை புதுமைப்பித்தன்.
நமது செவ்வியல் மரபு உலகச் செவ்வியல் மரபோடு இணைந்து கொள்வதைப்போல், தமிழ் நவீனப் புனைகதை மரபும் உலக நவீனப் புனைகதை மரபோடு இணைந்து கொள்வதற்கு மூலவித்தாய், முதன்மையான ஆக்கமாய் அமைவது புதுமைப்பித்தன் ஆக்கங்கள். நமது வீடுகள்தோறும், புதுமைப்பித்தனைக் கொண்டு செல்வோம். இளைய சமூகம், புதுமைப்பித்தனுக்குள் பயணிக்க வாசலைத் திறப்போம். அரசியல் பரப்புரையாய், கலை இலக்கியப் பரப்புரையையும் முன்னெடுப்போம். இதனைப் புதுமைப்பித்தனிலிருந்து தொடங்குவோம். அதற்கான அடையாளமே இந்நூல்.