
புராணங்கள் 18+1
புராணங்கள் 18+1
NAM TAMILAR PATHIPPAGAM:
உலக உயிரினங்களின் மனிதன் என்பவன் ஆறறிவு படைத்தவனாவான். ஏனையவற்றுக்கு இல்லாத பகுத்தறிவு பாணிதனுக்கு மட்டுமே உள்ளது. அறிவினால் சிந்தித்து ஆற்றலால் செயல்படும் திறம் படைத்தவன் மனிதன். தொடக்கக் காலத்தில் இயற்கையை வணங்கினான். பின்னர் சிந்திக்கத் தொடங்கிய பின்னர் இயற்கையாக நிகழும் நிகழ்வுகளைக் கண்டு அஞ்சியவனாய் வாழ்ந்தவன் பின்னர் ஒவ்வொன்றுக்கும் பெயரைப் பாண்டத்துத் தெய்வம் என்றும் தேவர் என்றும் கடவுள் என்றும் போற்றி அவற்றுக்கான கதைகளையும் இட்டுக்கட்டினான். அந்த வகையில் எழுந்தவையே புராணங்கள். இத்தகைய பாராணங்கள் 18 என்றனர். அவை வேதங்களுக்கு விளக்கங்களாக அமைந்தவை. அவை பகுத்தறிவுக்கு ஒவ்வாத பல சடங்குகளையும் கருத்துகளையும் படைத்துக்காட்டி நம்பிக்கை ஊட்ட முயன்றன. அவற்றில் புதைந்துகிடக்கும் பொய்களையும் புரட்டுகளையும் வெளிப்படுத்துவதே புராணங்கள் 18 +1 என்று தலைப்பிட்டு விளக்குகிறது இந்த நூல்.
பகுத்தறிவுப் பாதையில் நடைபயின்று தந்தை பெரியாரின் பரட்சிக் கருத்துகளில் தம்மை ஈடுபத்திக்கொண்ட பகுத்தறிவுச்சுடர் சு. அறிவுக்கரசு என்பவர் இந்த நூலை ஆக்கியுள்ளார். வடமொழில் அமைந்த புராணங்களை அறிந்து கொண்டு அவற்றில் புதைந்து கிடக்கும் அறிவுக்கொவ்வாத சிந்தனைகளை அறிந்துகொள்ளும் வகையில் இந்த நூலைப் படைத்துள்ளார் வேறுபல அறிவுக்கு விருந்து படைக்கும் நால்களையும் படைத்துள்ள அவருடைய எண்ண ஊற்றுகளை இந்நூலில் படித்து மகிழலாம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.