பொறிகள்
2020 உலகிற்குப் பல படிப்பினைகளைக் கற்றுத் தந்தது. கொரானா பெருந்தொற்று நோய் நாடுகளையும், சமுதாயத்தையும், மக்களையும் பெருமளவில் வாட்டி வதைத்துவிட்டது. தொழில் புரட்சி, தொழில்நுட்பப் புரட்சி, தகவல் தொழில்நுட்பப் புரட்சி, எண்முறை புரட்சி ஆகியன நான்கு நூற்றாண்டுகளில் மானுட வாழ்வில் பெரும் மாற்றங்களை உருவாக்கிவிட்டன. ஒரு புறம் பொருளாதார வளர்ச்சி, ஒரு புறம் பொருளாதார வீழ்ச்சி, இதன் விளைவுகளால் ஏற்பட்ட இயற்கை வீழ்ச்சி ஆகியன ஒன்றோடு ஒன்று பிணைந்திருக்கிறது என்பதை உலகம் இன்று உணர்ந்து விட்டது. இருப்பினும், சமயம், சமயம் சார்ந்த மூட நம்பிக்கைகள் இன்றும் தொடர்கின்றன. சாதி, மத மூடநம்பிக்கைகளை வீழ்த்திக் களம் கண்ட பல சமூகப் புரட்சியாளர்கள், சான்றோர்கள், அறிவியல் அறிஞர்கள், கருத்துகளை உடனடியாகத் தெரிந்து கொள்வதற்குத் தகவல் தொழில்நுட்பப் புரட்சி பெரிதும் பயன்படுகிறது