Skip to product information
1 of 2

சுயமரியாதைப் பதிப்பகம்

பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா

பெரியாரின் போர்வாள் நடிகவேள் எம்.ஆர்.ராதா

Regular price Rs. 250.00
Regular price Sale price Rs. 250.00
Sale Sold out
Shipping calculated at checkout.
தஞ்சை மானமிகு ச. சோமசுந்தரம் அவர்கள் நடிகவேள் எம். ஆர். ராதா அவர்களின் வரலாற்று நூலைக் கொண்டு வந்துள்ணார். தமிழர் களிடையே உள்ள பெரும்குறை, வரலாறுகளைத் தொகுக்காததுதான். அதை எண்ணும்போது நண்பர் சோமசுந்தரம் அவர்களின் இந்தச் செயல் எந்த அளவுக்குப் பாராட்டத்தகுந்தது என்பதை உணரலாம்.

தந்தை பெரியார் ஒரு வரலாறு - காலகட்டம் - திருப்பம் என்றார் அறிஞர் அண்ணா. அய்யா அவர்களின் புரட்சிகரமான பாதையில் கூட்டுப் பணியாளர்கள் பலர், கலைத்துறையில், குறிப்பாக நாடகத்துறையில் நடிகவேள் எம். ஆர். ராதா அவர்கள் தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பரப்பியதில், தன்னிகரில்லாதவர் - இதில் அவருக்கு நிகர் அவரேதான்.

போர்வாள், தூரக்குமேடை, இரத்தக்கண்ணீர், இலட்சுமிகாந்தன், இராமாயணம் போன்ற நாடகங்கள் மூலம் இயக்கத்திற்கு ஏராளமான
இளைஞர்களைக் கொண்டு சேர்த்தவர் நடிகவேள் ஆவார்கள். நடிகவேளின் நடிப்புப் பாங்கு என்பது தனித்தன்மையானது. பல
குரல்களில் நவரசங்களை நகைச்சுவைத் தேனில் குழைத்துத்தரும் அந்தக்
கைத்திறன் அவருக்கு மட்டுமே உண்டு.
தந்தை பெரியார் அவர்கள் சந்தித்த எதிர்ப்புகளைப் போலவே
நடிகவேள் அவர்களும் கடும் எதிர்ப்புகளைச் சந்தித்தவர்.
View full details