திருக்குறள் ஆரியக்கொள்கைகளை மறுக்க.அவைகளை மடியச்செய்ய,அக்கொள்கைகளிலிருந்து மக்களைத் திருப்ப எழுதப்பட்ட நூல் என்று தான் கருதுகிறேன்.
குறளை ஊன்றிப் படிப்பவர்கள் எல்லோரும் நிச்சயம் சுயமரியாதை உணர்ச்சி பெறுவார்கள்.
அரசியல் ஞானம்,சமூக ஞானம்,பொருளாதார ஞானம் ஆகிய சகலமும் அதில் அடங்கியிருக்கிறது.
கடவுளையும், மதத்தையும் எப்படி முட்டாள்தனமாகத் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ அதேபோன்று நீதி நூற்களிலும் நம்மை இழிவுபடுத்தும் இராமாயணம் பாரதம் கீதை போன்றவற்றை நம்பி வந்திருக்கிறோம். அதே சமயத்தில் உலகிற்கே பொதுவான அறிவு விளக்கத்தையும், அதற்கான அரசியல் முறைகளையும் மக்களின் வாழ்வுபற்றியும் எடுத்துக் கூறியுள்ள நமது திருக்குறளை நாம் மதிப்பதில்லை . படிப்பதுமில்ல.