பெரியார் பிராமணர்களின் எதிரியா? - சோழ.நாகராஜன்
பெரியார் பிராமணர்களின் எதிரியா? - சோழ.நாகராஜன்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பெரியார் பிராமணர்களின் எதிரியா? - சோழ.நாகராஜன்
இந்த நூலைப் படிக்கும் எவரும் பெரியாரைப் புரிந்து கொள்வார். இன்னும் முழுமையாக அறியத் துடிப்பார். அதுமட்டுமா, சாதிய உயர்வு தாழ்வை உயர்த்திப் பிடிக்கும், அதன்மூலம் எளிய மக்களின் மனங்களில் மதவெறியூட்டும் சனாதன இந்துத்துவ பிராமணிய எதிர்ப்பே இன்றைய தேவை என்பதைப் பெரியார் மூலமாகவே அறிந்து தெளிவார்.
- பேராசிரியர் அருணன்,
ஒருங்கிணைப்பாளர்,
தமிழக மக்கள் ஒற்றுமை மேடை.
இந்த நூலைப் பெரியார் பற்றாளர்கள் விரும்பிப் படிப்பார்கள். அது இயற்கையானது. ஆராய்ச்சி மாணவர்களுக்கு அவர்கள் அறிந்திராத பல செய்திகளும், இதுவரை பேசப்படாத பெரியாரின் புதிய பரிமாணங்களும் இந்த நூலில் கிடைக்கும். என்னுடைய விருப்பம் என்னவெனில், இந்த நூலைப் பெரியாரை விமர்சிப்பவர்களும் வெறுப்பவர்களும் படிக்க வேண்டும் என்பதே. அதேபோல, பார்ப்பன சமூகத்தின் இளைய தலைமுறை இந்நூலைப் படிக்க வேண்டும். அவர்கள் நேர்மையான உள்ளத்துடன் பெரியாரை அணுகவும், சாதிச் சேற்றில் சிக்கிக் கிடக்கும் எல்லா மனிதர்களும் அதனின்று மீண்டுவரவும் இந்த நூல் பேருதவி செய்யும். இப்பெரும் பணிக்காக தோழர் சோழ.நாகராஜன் அவர்களுக்கு என் பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.