பெண்ணுரிமைச் சிந்தனை
"பெண்களை ஆண்கள் படிக்க வைக்கவேண்டும். அவர்களுக்கு உலகப் படிப்பும் பகுத்தறிவும் ஆராய்ச்சிப் படிப்பும் தாராளமாய்க் கொடுக்கவேண்டும். புராண காலட்சேபமும். பழங்கால பதிவிரதைகள் கதைகளும் மாத்திரம் பெண்களுக்குத் தெரிந்தால் போதும் என்றால் பெண்கள் சிறிதும் பயன்படமாட்டார்கள். புருஷனின் அளவுக்கு மீறிய அன்பும், ஏராளமான நகையிலும், புடவையிலும் ஆசையும். அழகில் பிரக்யாதி பெறவேண்டுமென்ற விளம்பர ஆசையும் பெற்ற பெண்களும், செல்வத்தில் புரளும் அகம்பாவப் பெண்களும் அடிமை வாழ்விலேயே திருப்தி அடைந்து விடுவார்களே ஒழிய, உலக சீர்திருத்தத்திற்கோ. விடுதலைக்கோ பயன்படுவது கஷ்டமாகும். முதலில் நமது பெண்களுக்குப் பகுத்தறிவு ஏற்படச் செய்யவேண்டும். நமது நாட்டிலுள்ள கேடுகளெல்லாம் பெண்களைப் பகுத்தறிவற்ற ஜீவன்களாக வைத்திருக்கும் கொடுமை முக்கியமான கேடுகளில் ஒன்றாகும்."
-தந்தை பெரியார் (1940)
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.