Skip to content

பெண் விடுதலை இன்று

Sold out
Original price Rs. 60.00
Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price Rs. 60.00
Current price Rs. 57.00
Rs. 57.00 - Rs. 57.00
Current price Rs. 57.00

பெண் விடுதலை இன்று

 இப்படி பெண்கள் பெரும் அளவில் வேலைகளில் பங்கேற்பது ஒன்றும் புதிதல்ல. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பெண்கள் மனித சமூகத்தின் பொருளாயத நலன்களில் பெரும் பங்காற்றினர். குழுவிற்கான உணவைச் சேமிப்பதில் தொடங்கி விவசாயத்தின் எளிமையான வேலை களையும் பெண்கள் செய்தனர்'' என்கிறார் உயிரியல் மானிடவியலாளரான ஹெலன் ஃபிசர் (Helen Fischer). வர்க்க சமூகத்தின் (Class socicty) தோற்றத்தை ஒட்டியே பெண்ணடிமைத்தனமும் தோன்றியது என்கிறார் ஏங்கல்ஸ். நவீனமான உற்பத்திச் சாதனங்களின் உதவியுடன் நடந்த விவசாய சமூகத்தில் தேவைக்கு அதிகமான உற்பத்தி (உபரி) கிடைத்ததன் விளைவுதான் வர்த்தகப் பரிமாற்றம், தனிச் சொத்துடைமை, குடும்ப அமைப்பு போன்றவையும் அதை ஒட்டியே பெண்களை வீட்டுக்குள் அடைக்கும் சமூக நிலைமையும் உருவாகியது என்கிறார் மார்க்சிய பெண் எழுத்தாளரான சரோன் ஸ்மித் (Sharon Smith), உபரி உற்பத்தி (Surplus prodiction) இரண்டு வாய்ப்பு களைத் திறந்தது. ஒன்று, வர்த்தகப் பரிமாற்றம் (Exchange). மற்றொன்று, தனிச் சொத்துடைமை (Private property), அதற்கான குடும்ப அமைப்பு (Family)....

...பெண்களை வீட்டினுள் இருந்து அழைத்து வரவேண்டிய தேவை ஏற்பட்டு, அவர்களையும் உற்பத்தியில் ஈடுபடச் செய்து, அவர்களுக்கான சந்தையையும் நுகர்வியத்தையும் வளர்த்தெடுத்த முதலாளிய பொருளாதார சமூகக் கட்டமைப்புச் சூழலில் இன்றைய பெண்கள் வெறும் பண்டங்களாக மாற்றப்பட்டுள்ளனர். இந்தப் பண்ட - அடிமை நிலையைத்தான் (Slavery from Commodification) பெண் விடுதலை என்று நம்ப வைக்கப்படுகிறோம் அல்லது பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றோம்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.