Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

பெகாசஸ்: கார்ப்பரேட்டுகளின் உளவாளி

Original price Rs. 60.00 - Original price Rs. 60.00
Original price
Rs. 60.00
Rs. 60.00 - Rs. 60.00
Current price Rs. 60.00

பெகாசஸ்: கார்ப்பரேட்டுகளின் உளவாளி - பெரியார் Saravanan

காலத்தின் தேவைக் கருதி இதோ பெகாசஸ் வந்து விட்டது.
-----------------------------------------------------------------------
கடந்த பாராளுமன்றக் கூட்டத் தொடர் பெகாசஸ் என்கின்ற உளவு பார்க்கும் மென்பொருளைக் கொண்டு சட்ட விரோதமாக ஒன்றிய அரசு வேவு பார்க்கிறது என்கின்ற காரணத்தி னால் முடக்கப் பட்டது.
எனவே பெகாசஸ் என்றால் என்ன, அது எப்படி எல்லாம் வேலை செய்யும், அது எப்படி மனித குலத்திற்கு எதிரானது, என்ன நோக்கத்திற்காக இது தயாரிக்கப்பட்டது, NSO என்றால் என்ன, பெகாசசுக்கும் இஸ்ரேலிய மொசாட்டிற்கும் என்ன தொடர்பு..!
போன்ற தரவுகளை எல்லாம் மிக நுணுக்கமாகத் தேடி உலக அளவில் இதுவரை யாருமே விவரிக்க முடியாத அளவிற்கு மறுக்க முடியாத ஆதாரங்களுடன் பெகாசஸ் கார்ப்பரேட்டுகளின் உளவாளி என்கின்ற தலைப்பில் புத்தகமாக எழுதினேன்.
நடப்பு பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் முடிவதற்குள் இந்தப் புத்தகத்தை கொண்டு வார முடியுமா என்று உயிரெழுத்து பதிப்பகத்தா ரிடம் கேட்டேன்.
ஆனால் உயிரெழுத்து பதிப்பகத்தா ரின் சீரிய முயற்சியில் அனைத்து வேலைகளையும் முடித்து குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய உடனே புத்தகத்தை அச்சடித்து விற்பனைக் கும் அனுப்பி விட்டார்கள்.
மேலும் புத்தகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக இந்திய தேசிய லீக் கட்சியின் தலைவர் தோழர் தடா.அப்துல் ரஹீம் அவர்களின் அழகிய அனிந்துரையுடன் இப்போது புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது.
அறிவியலை எப்படி எதிரிகள் ஆயுதமாக மாற்றுகிறார்கள் என்பதை களப்பணியாளர்கள் அவசியம் தெரிந்துக்கொள்ள வேண்டும். மனிதம், மனித உரிமை நேசிக்கும் ஒவ்வொறுவரும் வாசிக்க வேண்டிய ஒரு புத்தகம் இது.
வழக்கம்போல் எனது எல்லா முயற்சிகளுக்கும் ஆதரவு தந்து, என்னை சோர்ந்துப் போகாமல் தாங்கிப் பிடிக்கும் தோழர்கள் இந்தப் புத்தகத்தையும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று தாழ்மையு டன் கேட்டுக் கொள்கிறேன்.

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.