சாரதா பதிப்பகம்
பழந்தமிழர் நாகரிகம்
பழந்தமிழர் நாகரிகம்
Couldn't load pickup availability
எந்த மொழிக்கும் முந்தைய மொழியாக தமிழ்த் திகழ்வது. பல மொழிகளும் தோன்றாதிருந்த காலத்திலேயே நாகரிகமும் பண்பாடும் நிறைந்திருந்த மக்கள் வாழ்ந்த நாட்டில் தோன்றியது மட்டுமின்றி, மக்கள் வாழ்ந்த பண்பாட்டு வாழ்க்கையின் பொருள் இலக்கணத்தைக் கண்டு உலகிற்கு வழங்கும் உயர்ந்த நூலான தொல்காப்பியம் முதல் தமிழ் நூலாக நமக்குக் கிடைத்திருக்கின்றது. அக்கால மக்களின் வாழ்க்கை முறை, பண்பாடு, பழக்கவழக்கம், நூல்கள் தோன்றுவதற்கான முறை என பலவும் ஆராய்ந்தறிவதற்கு பேருதவி புரியும் புதையலாக அமைந்திருப்பது தொல்காப்பியம். மக்கள் வாழ்க்கையினை அகவாழ்க்கை என்றும் புறவாழ்க்கை என்றும் பகுத்துக் கூறியது. அகவாழ்க்கை என்பது மனமாத்த ஆணும் பெண்ணும் இணைந்து வாழும் வாழ்க்கை எனப்பகுத்து அதற்கு இலக்கணம் கூறி இமயம் போல் உயர்ந்து நிற்கச் செய்ததது.புறம் என்பது புறத்தேநிகழ்கின்ற அரசியல், போர்முறை, பண்பாட்டுப் பழக்க வழக்கங்கள், மன மகிழ்ச்சிக்கான பிற நடைமுறைகள் என இவற்றை விளக்கும் வாழ்க்கை முறையைத் தொகுத்துக் கூறும் நூலாகப் பழந்தமிழர் நாகரிகம்' என்னும் இந்நூல் மலர்ந்துள்ளது.

