பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!
பார்ப்பனர் புரட்டுக்குப் பதிலடி!
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தமிழ்நாட்டு காங்கிரஸ் பார்ப்பனர்களின் ஜாதி அபிமானம் தமிழர்களின் சமையல்கூடம் மற்றவர்களின் சமையல் கூடத்திற்குத் தொலைவில் தனியாக இருந்தது. தாங்கள் சாப்பிடுவதைப் பிறர் . பார்த்துவிட்டால்கூடத் தோஷம் என்று தமிழ்ப் பிரதிநிதிகள் கருதினார்கள். . எனவே, அவர்களுக்கு என்று தனியான சமையல்கூடத்தை கல்லூரி, மைதானத்தில் அமைந்திருந்தார்கள். நாற்புறமும் தட்டி வைத்து இந்தக் கூடம் கட்டப்பட்டிருந்தது. அதில் ஒரே புகை; யாரையும் மூச்சுத் திணறச் செய்துவிடும், சமைப்பது, சாப்பிடுவது. கையலம்புவது எல்லாம் அதற்குள்ளேதான். திறப்பே இல்லாத இரும்புப் பெட்டிபோல் இருந்தது அந்த இடம். இது வருண தருமத்தின் சீர்கேடாகவே எனக்குத் தோன்றிற்று. காங்கிரசின் பிரதிநிதிகளுக்குள்ளே இத்தகைய தீண்டாமை இருந்து வருகிறதென்றால், இவர்கள் யாருக்கு பிரதிநிதிகள் என்று வந்திருக்கிறார்களோ அந்த மக்களிடம் தீண்டாமை இன்னும் எவ்வளவு மோசமாக இருந்து வருகிறது என்பதைத் தெரிந்து கொள்ளலாம் என்று எனக்குள்ளேயே சொல்லிக் கொண்டேன்.