பண்பாட்டு மானிடவியல் | panpaattu-maanidaviyal- பக்தவத்சல பாரதி
பண்பாட்டு மானிடவியல் | panpaattu-maanidaviyal- பக்தவத்சல பாரதி
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
பண்பாட்டு மானிடவியல் - panpaattu-maanidaviyal- பக்தவத்சல பாரதி
வரம்பை உள்ளடக்கி இருக்கும் அது மனித சமூகங்களில் சமூக ரீதியான கற்றல் மூலம் பரவுகிறது. கலை, இசை, சடங்கு, சமயம், உடை, சமயல், தொழில்நுட்பங்கள், பயன்பாட்டுக் கருவிகள், குடியிருப்பு என பல்வேறு வடிவங்களில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த நூலில் பக்தவத்சல பாரதி மானிடவியலின் மையக்கருத்தாக இருக்கும் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்குவதற்கு முதலில் மானிடவியலின் தோற்றம் அதன் வளர்ச்சி, உட்பிரிவுகள், ஆய்வுமுறை பற்றி பேசுகிறார். பிறகு அனைத்து சமூகங்களிலும் காணப்படும் பண்பாட்டு பொதுமைகளைப் பற்றி விவரிக்கிறார். இதற்காகப் பண்பாடு தம்மை வெளிப்படுத்திக் கொள்ளும் பல்வேறு வடிவங்களை அதன் உட்கூறுகள், அமைப்பு, அணுகுமுறை, படிமலர்ச்சி, பரவல், மாற்றம், சமூக அமைப்புகள், குடும்பம், திருமணம், உறவுமுறை, தொன்மைப் பொருளாதாரம், சமயம், வழிபாடு, இளையோர் கூடங்கள், தொல்குடி அரசு முறைகள் என பல்வேறு தலைப்புகளைக் கொண்டு விவரிக்கிறார். இதன் மூலம் வாழ்க்கை முறையாகவும் வாழ்வுக்கான அர்த்த மாகவும் அமையும் பண்பாட்டை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள உதவுகிறது இந்த நூல்.