பண்பாட்டு அசைவுகள்
பண்பாட்டு அசைவுகள்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
‘அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய இரு நூல்களில் உள்ள கட்டுரைகளையும் சில புதிய கட்டுரைகளையும் உள்ளடக்கிய தொகுப்பு இது. மண்ணும், மண்ணின் உயிர்வகைகளும் பயிர்வகைகளும் இவற்றினுடான மனித அசைவுகளும் பன்முகத் தன்மைகொண்டவை என்ற புரிதலை இந்நூல் ஏற்படுத்துகிறது. நம்மைச் சுற்றியுள்ள அசைவுகளை எந்திரகதியில் அல்லாமல் தன்னுணர்ச்சியோடு காணவைக்கிறது.
நெல்லை மாவட்டத்தில் ஐயா.தொ.ப நேரடியாகக் கண்டு பதிவு செய்த சம்பவத்துடன் தொடங்குவோம்.
இருபத்தெட்டு வயது திருமணமான இளைஞன் விபத்தில் இறந்து போகிறான். மனைவிக்கு இருபத்து மூன்று வயதிருக்கும். ஒரு பெண் குழந்தை. துக்க வீட்டினுள் ஒரே அழுகை சத்தம். துக்க வீட்டின் முன் மேளச்சத்தம். ஊரே துக்க வீட்டில் கூடி நிற்கிறது. திடீரென்று துக்க வீட்டிலிருந்து ஒரு மூதாட்டி ஒரு தண்ணீர் செம்பு நிறைய தண்ணீரோடு வெளியே வருகிறாள். பெரியோர்கள் நிற்கிற இடத்தின் நடுவே தண்ணீர் செம்பை வைத்துவிட்டு தன் வலக்ககையில் மறைத்து வைத்திருந்த பிச்சிப்பூ( முல்லைப்பூ) ஒன்றை சொம்பு தண்ணீரில் இடுகிறாள். கூட்டம் மூச்சடங்கியது. இரண்டாவது பூவையும் தண்ணீரில் இடுகிறாள். கூட்டம் ச்சூ ச்சூ என அனுதாப ஒளி எழுப்புகிறது. மூன்றாவது பூவையும் தண்ணீர் சொம்பில் இடுகிறாள் மூதாட்டி. கூட்டம் அனுதாப ஒளி எழுப்புகிறது. பிறகு சில வினாடிகள் கழித்து மூன்று பூவையும் எடுத்துக் கொண்டு தண்ணீரை கீழே கொட்டிவிட்டு மூதாட்டி வீட்டினுள் சென்றுவிடுகிறாள். கூட்டத்தில் அனுதாப ஒலியோடு “ம்... பாவம் என்னத்த சொல்றது” என்ற அனுதாப வார்த்தைகள் சேர்ந்து கொள்கிறது.
சாட்சியாய் நின்று கொண்டிருக்கும் தொ.ப அவர்களுக்கு அங்கு நடப்பது ஒன்றும் புரியாமல் அங்கிருந்த முதியவரிடம் இது பற்றி கேட்க,”இது தெரியலையா ஒனக்கு... தாலி அறுக்கிற பொம்பளப்புள்ள மூணு மாசமாம முழுகாம இருக்கு’ என்கிறார். விவரம் புரியாமல் தொ.ப “அந்தப் பொன்னு முழுகாம இருக்கற விஷயத்தை ஏன் ஊருல சொல்லனும்” எனக்கேட்க, அதற்கு ஒரு பெரியவர் எரிச்சலுடன், “பேரப்புள்ள , ஏழு மாசம் கழிச்சு அவபுள்ள பெத்தா நீ கேக்க மாட்டியா, எப்படி புள்ள வந்திச்சுன்னு” என்கிறார். தொ.ப அதிர்ச்சியாலும் அவமானத்தாலும் குன்றிப் போகிறார். ‘ இதோ , இந்தப் பெண் இறந்து போனவனுக்காக வயிறு வாய்த்திருக்கிறாள். ஏழு மாசம் கழித்துப் பிறக்கப் போகும் குழந்தைக்குத் தந்தை இன்றைக்கு இறந்து போனவன்தான்’ என்று ஊரும் உலகமும் அறிய அந்தச் சடங்கு பிரகடனம் செய்திருக்கிறது. பிறக்கின்ற எந்த உயிறும் தந்தை பெயர அறியாமல் பூமிக்கு வரக்கூடாது என்ற சமூகக் கட்டுப்பாடு இச்சம்பவத்திலிருந்து விளங்குகிறது.
இது சோக சம்பவமாயினும், ஒரு பண்பாடு பேச்சே இல்லாத ஒரு சிறு அசைவின் மூலம் எவ்வாளவு நுட்பமாகவும், மென்மையாகவும் தன்னை அடையாளம் காட்டிக் கொள்கிறது.
இந்த பண்பாட்டு அசைவைப் பற்றித்தான் இந்த நூல். இந்நூல் தொ.ப அவர்களின் அறியப்படாத தமிழகம், தெய்வங்களும் சமூக மரபுகளும் என்ற இரண்டு முந்தைய நூல்களின தொகுப்பு.
இந்நூலின் முற்பகுதி அறியப்படாத தமிழகம் என்பது. இதில்தான் மேற்சொன்ன சம்பவம் வருகிறது. சாதாரணமாக நாம் கடந்து செல்லும் செயல்களுக்கு புதிய நோக்கில் “ தெறி” விளக்கம் அளித்துள்ளார் தொ.ப. இந்த நூலின் முற்பகுதி பல்வேறு தலைப்புகளில் சிறு சிறு கட்டுரைகளையே கொண்டது. ஆனால் இதன் வீச்சு விரிவானது.