பங்குச்சந்தை மோசடிகள்
பங்குச் சந்தை என்பது பெரும் நிறுவனங்கள் தங்கள் பணத்தை அதிகரிக்கவும் தங்களின் நிதித் தேவையைப் பூர்த்தி செய்யவும் மிக முக்கியமான ஆதாரங்களில் ஒன்றாகும். நிறுவனத்தின் மதிப்பை பங்குகளாக பங்குதாரர்களுக்கு விற்று தங்கள் வியாபாரத்திற்குத் தேவையான நிதியைப் பெற பங்குச்சந்தை இடைத் தரகராக செயல்படுகிறது. பங்குச்சந்தை இடைத் தரகருக்கு செபி என்று பெயர். அது ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் இயங்குகிறது. அதன் முக்கிய பணி முதலீட்டாளர்களுக்கும், முதலீட்டாளர்களின் நிறுவனப் பங்குகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் பணத்தை நடுநிலையோடு கையாள்வது தான்.
பணம் அதிகம் விளையாடும் இடத்தில் ஊழலும் மோசடிகளும் இணைந்து பயணிக்கும் என்பதற்கு ஏற்றது போல், இந்திய பங்குச் சந்தையிலும் மோசடிகள் எப்படியெல்லாம் நிகழ்ந்தது? அதற்கு காரணகர்த்தாவாக யார் இருந்தார்கள்? அவர்கள் செய்த மோசடிகள் என்னென்ன? என்பதையெல்லாம் அறிமுகப்படுத்துகிறது 'பங்குச்சந்தை மோசடிகள்' எனும் இந்நூல். பங்குச்சந்தையில் முதலீடுகள் என்ற பெயரில் மோசடிகள் நடந்தது போல் இன்று பங்குச்சந்தையை நிர்வகிக்கும் செபி நிறுவனமே மோசடியில் ஈடுபட்டுள்ளனர் என்ற ஹிண்டன்பர்க் அறிக்கை வெளிவந்தது. பல லட்சம் கோடி மக்கள் பணம் புழங்கும் சந்தையில் எப்படி மோசடிகளை அரங்கேற்றுகிறார்கள் என்பதை எழுத்தாளர் சொக்கலிங்கம் அம்பலப்படுத்தி நம்மை எச்சரித்துள்ளார்.