பண்டிதர் அயோத்திதாசரும் மகா மதுர கவி வீ.வே.முருகேச பாகவதரும்
"பௌத்த ஆய்வு உலகில், நண்பர் முனைவர் ஜெயபாலன் அவர்களின் படைப்பான பௌத்தத் தமிழ் இலக்கிய வரலாறு' என்னும் நூல் அறிஞர் பெருமக்களின் பாராட்டுதலைப் பெற்றுத் தடம் பதித்துப் புகழ் பூத்து விளங்குவது குறிப்பிடத்தக்கது. இந்நூல் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் பெற்று வெளிவந்து, இவர்தம் வாசகர் வட்டத்தை விரிவாக்கியுள்ளது கூடுதல் சிறப்பிற்குரியது.
தமிழ்த் தென்றல் திரு. வி. க. அவர்கள் சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர். 'தமிழ் நூல்களில் பௌத்தம்' என்னும் தம் நூலால் பௌத்தத் தமிழ் இலக்கியப் பதிவுகளுக்கு அரிச்சுவடி எழுதி, பேராசிரியர் ஜெயபாலன் அவர்களோ இன்று பௌத்தத்தில் ஆய்வுச் சுவடு பதித்து வெற்றி நடை போடுவது பெரிதும் வரவேற்று மகிழத் தக்கதாகின்றது!"
பேராசிரியர் முனைவர் ப.மகாலிங்கம்
மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்
மாநிலக்கல்லூரி சென்னை.
மேனாள் நாட்டு நலப்பணித் திட்ட இயக்குநர்
சென்னைப் பல்கலைக்கழகம்.
கலைப்புல முதன்மையர்
வேல்ஸ் கல்வி நிறுவனம்.
"பண்டிதர் அயோத்திதாசரையும் மகா மதுர கவிஞர் முருகேச பாகவதரையும் ஒப்பிட்டு முனைவர் க. ஜெயபாலன் அவர்கள் எழுதியுள்ள இந்த நூல் மிக முக்கியமானது. தொடர்ந்து அறிவுலகில் இலக்கிய உலகில் இயங்கி வருகிற ஜெயபாலன் அயோத்திதாசர், முருகேச பாகவதர், தமிழ் ஒளி உள்ளிட்ட பல ஆளுமைகளின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்சுகிறார். தமிழ் ஆய்வுலகம் மட்டுமின்றி வரலாறு, கலை. இலக்கியம் சார்ந்த அனைவரும் வாங்கிப் பயில வேண்டிய ஒரு நூல் எனலாம்."
முனைவர் கோ. பழனி
பேராசிரியர்
தமிழ் இலக்கியத்துறை, இயக்குநர், மெரினா வளாகம்,
சென்னைப் பல்கலைக்கழகம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.