சீதை பதிப்பகம்
பனகல் அரசர்
பனகல் அரசர்
Couldn't load pickup availability
பனகல் அரசர் முன்னோர்கள் பெரிய பணக்காரர்கள். அவர்களுக்கு ஏராளமான நிலங்களுண்டு. நிலங்கள் மிகுதியாக வைத்திருப்பவர்களுக்கு ஜமீன் தார்கள் என்று பெயர். அவர்களுக்கு அநேக வேலைக்காரர்கள் உண்டு; அதிகாரமும், ஆடம்பரமும் உண்டு. அவர்கள் வசிக்கும் ஊர்களிலுள்ள ஜனங்கள் அவர்களைச் சிறு மன்னர்களைப் போல் எண்ணுவார்கள். அவ்வளவு பெருமை ஜமீன்தார்களுக்கு உண்டு.
பனகல் அரசர் பிறந்த குடும்பமும் ஒரு ஜமீன்தார் குடும்பமே. அக்குடும்பத்தார் பெரிய பணக்காரர்களாக இருந்த போதிலும், எல்லோரிடத்தும் மரியாதையாகவும், ஏழை களிடத்தில் அன்பாகவும் நடந்து வந்தார்கள். அவர் களுக்கு வீண்பெருமையும், கர்வமும் ஒரு சிறிதும் இல்லை. பெருந்தன்மை என்பது அவர்களுக்குச் சொந்தமாக இருந்தது. அநேகமாக, பெரிய ஜமீன்தார்கள் குடும்பத்தில் பிறந்தவர்கள் கல்வி சிறப்பாகக் கற்பதில்லை . ஆனால், பனகல் அரசர் முன்னோர்கள் நன்றாகவும் படித்தவர்கள்.
