பகல் கனவு
பகல் கனவு
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சுமார் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பு,ஆங்கிலேயே அரசாங்கம் இளம் சிறார்களுக்குக் கற்றுத்தரும் ஆசிரியர்களை சோம்பலான, சக்தியற்ற கல்விமுறையை ஏற்றுக்கொள்ளச் செய்தது. முழந்தைகளுக்குப் பிடித்தமான ஆயிரக்கணக்கான விஷயங்களை -மண்ணில் இருக்கும் பூச்சி புழுக்களிலிருந்து, வானத்திலிருக்கும் நட்சத்திரங்கள் வரை - வகுப்பறைக்கல்விக்கு ஏற்றதல்ல என்றே நம் நாட்டில் நிலவிய கல்விமுறை கருதி வந்தது. குஜராத் மாநிலத்தின் சிறந்த ஆசிரியரும்,கல்வியாளருமான ஜிஜூபாய் பதேக்கா எழுதிய 'திவசப்னா' என்னும் நூலை மறுபதிப்புச் செய்வதற்குப் பொருத்தமான சூழல் இருக்கிறது. இந்த நூல் 1932 இல் குஜராத்தி மொழியில் முதன் முதலாக வெளியிடப்பட்டது. அதே ஆண்டில், மத்தியப்பிரதேசத்தின் சிறந்த கல்வியாளரான திரு காசிநாத் திரிவேதி 'பகல் கனவு' நூலை இந்தி மொழியில் வெளியிடும் முயற்சியைத் தொடங்கினார். பகல் கனவு நூலைப் படிக்கும் வாசகர் எவரும் ஆர்வத்திலும் மகிழ்ச்சியிலும் துள்ளிக் குதிப்பார்.
குழந்தைகளின் உளவியலை அறிந்து அவர்களை எவ்வாறு கல்வியில் நாட்டம் கொள்ளச் செய்வது, புத்தாக்க முறையில் கல்வி கற்பிப்பது எப்படி என்பதை கதை வடிவில் விளக்கியுள்ளார் நூலாசிரியர்.