Skip to product information
1 of 2

Golden King Pathippagam

ஊரார் வரைந்த ஓவியம்

ஊரார் வரைந்த ஓவியம்

Regular price Rs. 40.00
Regular price Sale price Rs. 40.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

தான் பிறந்த மண்ணில் தாம் வாழும் காலத்திலேயே சாதாரண மக்களின் அன்பு. பாசம், நட்பு என மிகுதியானதோர் பிணைப்பை ஒரு காவியமாக தீட்டி “ஊரார் வரைந்த ஓவியம்” என்ற நூலிற்கான உழைப்பின் மூலம் வியக்க வைத்துளளார் துரைகுணா. கொந்தளிப்பான நிகழ்ச்சிகளை எளிதாகவும், கடினமான துயரத்தை மிருதுவாகவும் தொகுத்து சிறிய நூலாக்கி வாசிக்கும் பொழுது அதிரவைக்கும் பிரம்மையை ஏற்படுத்துகிறது. இப்பணி எனிதானதல்ல என்பதை உணர்க்றேன் என்றாலும் இதில் வரும் கருத்துகள் சம்பவங்கள் பெயர்கள் எல்லாம் ஊரார் கொடுத்த ஒப்புதல் வாக்குமூலமாகும். உண்மைகளை துருவி துருவி ஆராயும் போது இயக்கவியல் மனம் மிளிரச்செய்துவிடும் என்பதை இந்த சிறிய நூல் உணர்த்துகிறது. குணா தனது இளம் வயதில் சமூகத்தில் நடக்கும் அக்கிரமத்தை வெளிப்படுத்தும் விதம் பாரதி கண்ட அக்கினி குஞ்சாய் எழுத்துலகில் சிறகடித்திட எதிர்காலம் பிரகாசமாய் தெரிகிறது. சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவர்களின் வாழ்வில் கண்முன்னே நடக்கும் கொடுமையை காணாமல் செல்லும் மனிதர்களுக்கும் மத்தியில், ‘ஊர் ஓடும்போது ஒத்துஒடு’ என வியாக்கானம் சொல்லி சுரண்டல் நீடிப்பது, சமூக ஏற்றத்தாழ்வுகள் வளர்வது தாங்கிக் கொள்ளமுடியாத துயரமாகும். சுரண்டப்படும் மக்களோடு இணைந்து பணியாற்றிடும் போது அம்மக்களின் விழிப்புணர்வுக்கு மிகுந்த உந்துசக்தியாக ஊரார் வரைந்த ஓவியம் எனும் நூல் இருப்பது சிறப்பானதாகும்.

View full details