ஓலம்...
பார்ப்பனிய எழுத்துலகின் நேர் எதிராக நின்று போரிடும் இலக்கியத்தை மனித மாண்பை மீட்டெடுக்கும் வாழ்வியற் பிரதிகளை வெற்றலங்காரங்கள் ஏதுமற்று, அதே நேரம் இந்திய தலித்துகளின் உயிர்ப்பு மிகுந்த போராட்ட வாழ்வையும் இருப்பையும் எழுத்துகளாய் முன் வைத்து வருபவர் சகோதரர் சரண்குமார் லிம்பாலே.
வெமுலாக்களும் இளவரசன்களும் கொல்லப்படுவதின் நம்பிக்கையின்மையோடு நாம் நின்றுவிட இயலாது. கலைக்குள்ளும் படைப்பிலக்கியத்திற்குள்ளும் அண்ணல் அம்பேத்கரை சரண்குமார் லிம்பாலே கொண்டு வருவது போல் மட்டுமல்ல; பெரியாரையும் புலே -சாவித்திரியையும், புத்தரையும் பாத்திரங்களாக மாற்றித்தான் ஊர்-சேரி இருப்பையும் கோத்திர சூத்திர இழிதன்மைகளையும் நம்மீது சுமத்திக் கொண்டிருக்கும் பார்ப்பன மகாபாரதங்களையும் ராமாயணங்களையும் நாம் தோற்கடிக்க முடியும். அதன் மூலம் சாதிய பண்பாட்டிலிருந்து தப்பியெழவும் முடியும். அத்தகைய வாழ்வியலைப் பேசும் நாவல் இது.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.