Skip to product information
1 of 2

விகடன் பிரசுரம்

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்

ஓமந்தூரார் முதல்வர்களின் முதல்வர்

Regular price Rs. 85.00
Regular price Sale price Rs. 85.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

இன்றைய உலகில் ஊழலும் லஞ்சமும், அரசியல் சுயலாபமும் தலைவிரித்தாடுகின்றன. பதவிக்காக எதையும் செய்யத் துணிவது அரசியல்வாதிகளின் முக்கியக் கொள்கையாகிவிட்டது. நாட்டில் வன்முறைகள் ஆக்கிரமித்துவிட்டன. சொந்த தேசத்திலேயே அகதிகளாக நடத்தப்படுவதும், இன வாதமும், உலகம் வேடிக்கை பார்க்கும் வேதனைக் காட்சிகளும் ஒவ்வொரு நாளும் அரங்கேறுகின்றன. இவற்றுக்கெல்லாம் மருந்து தடவும் விதமாக வாழ்ந்து மறைந்த சென்னை மாகாணத்தின் முதல்வர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியாரின் வாழ்க்கை வரலாற்றை அழகாகச் சொல்கிறது இந்த நூல். இரண்டு ஆண்டுகளே ஆட்சியில் இருந்தாலும் இன்றளவும் போற்றக்கூடிய ஓமந்தூராரின் நிர்வாகத் திறமை, ஜமீன்தாரி ஒழிப்பு, தேவதாசி முறை ஒழிப்பு, மதுவிலக்கு, இந்துசமய அறநிலையச் சட்டங்களையும், வேளாண் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை போன்ற பல நலத்திட்ட சாதனைகளையும் நிகழ்த்தி விட்டு சென்றிருப்பதைப் படிக்கும்போது அவரது உன்னதமான அரசியல்வாதியின் அகமும் முகமும் ஆழ்மனதில் தெரிகிறது. நூலைப் படிக்கப் படிக்க விறுவிறுப்பும் ஆவலும் மேலிடுகிறது. ஓமந்தூராரின் இளமைப் பருவம் தொடங்கி அவருடைய ஒரே மகனான சுந்தரம் குருகுலப் பள்ளியில் படிக்கும்போது இறந்துபோகும் சம்பவம், மாநாட்டுக்கு கொடிக் கம்பம் நடக்கூடாது என்கிறபோது உயரமான பனைமரங்களில் தேசியக் கொடிகளைக் கட்டி பறக்க விட்ட நிகழ்வு, முதலமைச்சராக இருந்தபோது அவருடைய அன்றாட அலுவல்கள் என்று அந்தக் காலகட்டத்துக்கே நம்மை அழைத்துச் செல்கிறது எஸ்.ராஜகுமாரனின் இயல்பான எழுத்து. ஓமந்தூராரின் வாழ்க்கை வரலாற்றை, கள ஆய்வோடு சுவைபட எழுதப்பட்டுள்ள இந்த நூல், அரசியல் வாழ்க்கை நடத்துபவர்களும், புதிதாக அரசியலுக்கு வரும் இளைஞர்களும் வாசகர்களும் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய நூல்.

ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த ஓமந்தூரார் ஆசைகளற்ற ஓர் அரிய துறவியாகவே அரசியல் அரங்கத்தில் வலம் வந்தார். ஆட்சி நிர்வாகத்தில் கட்சிக்காரர்களின் நிழல் கூடப் படிந்துவிடாமல் 'இலக்குவன் கோடு' கிழித்துக் கடுமையாகக் காவல் காத்த ஓமந்தூராருக்கு இணை சொல்ல இன்றுவரை ஒரு மனிதரும் இந்திய அரசியலிலேயே இல்லை . விவசாயப் பின்புலமும், ஒழுக்கம் செறிந்த வாழ்க்கை முறையும் கொண்டு, நிர்வாகப் பயிற்சி எள்ளளவும் இல்லாமல் ஆட்சிபீடத்தில் அமர்ந்து அரிய சாதனைகளை நிகழ்த்திய முதல் மண்வாசனை மனிதர் ஓமந்தூராரைப் பற்றி இன்றைய இளந்தலைமுறை அறிந்துகொள்ள வேண்டும் தியாகம், தன்னல மறுப்பு, சேவா மனப்பான்மை, எளிமை, அடக்கம் ஆகிய அடிப்படைப் பண்புகளுடன் தமிழகத்தில் பொது வாழ்வு மீண்டும் பூக்க வேண்டும்.

View full details