நீதிக்கட்சி வரலாறு - தொகுதி 1 & 2 (2 புத்தகங்கள்)
நீதிக்கட்சி வரலாறு - தொகுதி 1 & 2 (2 புத்தகங்கள்)
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தி.க. தி.மு.க. அ.தி.மு.க உள்ளிட திராவிட இயக்கங்களில் தாய்க்கழகம். தென்னிந்திய நல உரிமைக்கழகம். "ஜஸ்டிஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகையை நடத்தியதால் 'நீதிக்கட்சி' என்று பெயர் பெற்றது. மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த 192 ஆம் ஆண்டு, தேர்தலில் சென்னை மாகாணத்து ஆட்சியைப் பிடித்ததும் இந்தக் கட்சிதான். இதுவே திராவிடர் கழகம் என்று பின்னர் பெயர் மாறப்பட்டது.
சலிப்பு ஏற்படுத்தாத நடையில் தொகுத்திருக்கும் க. திருனாவுக்கரசின் பணி வரலாற்று ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல; அரசியல் ஆர்வலர்களுக்குமான நல்ல புதையல்! நூலாசிரியருக்கு பள்ளிப்பருவம் முதலே திராவிட இயக்க ஈடுபாடு உண்டு. இவரின் குடும்பத்தை அண்ணாதுரை நன்கு அறிந்தவர். நக்கீரன், நம்நாடு பேசுகிறது எனும் இதழ்களை நடத்தியவர். தொழிலாளார் முன்னேற்ற சங்கப் பேரவையின் உழைப்பாளியை முதன் முதலாக அச்சிட்டவர். திராவிட இயக்க வரல்லாற்றை 1 தொகுதியாக எழுதிவரும் இவர், இதன் முதல்கட்டமாக நீதிக்கட்சி வரலாற்றை இரண்டு தொகுதிகளாக தற்போது வெளியிட்டுள்ளார். 8 தொகுதிகள் வர இருக்கின்றன. சென்னை மாகாணம் முதல் பெரியாரும் நீதிகட்சியும் முடிய 63 அத்தியாயங்களில் நீதிக்கட்சி வரலாறு விரிவாக, தெளிவாக, சுவையாக எழுதப்பட்டுள்ளது. தொடர்புடையவர்களின் ஏராளமான புகைப்படங்கள் நூலுக்கு அழகு சேர்க்கிறது வரலாற்று ஆவணமாக திகழ்கிறது இந்த நூல்.
தொடர்புடைய மற்ற பதிவுகள்: