நமது மொழி
தம் பின்பு ஒரு தனி மொழியினின்றும் பிரிந்தனவாகக் காணப்படுகின்றன. அத் தனிமொழி எதுவென நீண்ட ஆராயப்பட்டது. இன்று மேல் நாட்டறிஞர்கள் செய் துள்ள ஆராய்ச்சிகளை எல்லாம் ஒருங்குவைத்து நோக்குவோமாயின், தமிழ்மொழியே அம் மொழி அல்லது அதற்கு அண்மையிலுள்ளதெனத் தெரிகின்றது. இக்கருத்து வெறுங் கற்பனையன்று; மேல்நாட்டறிஞ ராலேயே ஆராய்ந்து கூறப்பட்டது. அக்கருத்துகளைத் கழுவி இந்நூல் எழுதப்படலாயிற்று. மேல்நாட்டு ஆராய்ச்சியாளர், தமிழ் மிகத் திருந்திய முதியமொழி என்றும், தமிழரின் நாகரிகம் மிகப் பழைமையுடைய தென்றும் ஆராய்ந்து காட்டி வருகின்றனர். நாமோ நமது பெருமையை அறியாதவர்களாக விருக்கின்றோம் மக்கள் தோன்றிய காலத்தே தோன்றி இன்று வரையில் உலக வழக்கொழியாது இருந்து வருகின்ற தமிழின் பழைமை யையும் பெருமையையும் உணர்ந்து அம்மொழியை ஓம்புவது நம் எல்லோருடைய கடமையுமாகும். இவ் வுணர்ச்சி பற்றியே இந்நூல் எழுவதாயிற்று.