நான் நாத்திகவாதி ஆனதேன்?
நான் நாத்திகவாதி ஆனதேன்?
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
நான் சம்பந்தப்பட்ட மட்டில் தேவ அருள் நுழையாத புஸ்தகங்களையே பெரிதும் விரும்புகிறேன். என் மூளையின் இயல்பு அங்ஙனமிருக்கிறது. பூர்வ உலகத்தில் தோன்றின எல்லா தீர்க்கதரிசிகள் எழுதிய புஸ்தகங்களையும்விட, ஷேக்ஸ்பியர் எழுதிய நூல் எனக்கு அதிகமான சந்தோஷத்தைக் கொடுக்கிறது. மனதின் பசியைத் திருப்தி செய்து வைக்கக்கூடிய எண்ணங்களும் இருக்கின்றன. ஆதியாகமம் எழுதிய ஆசிரியரைவிட ஹம்போல்ட் என்னும் பெரியார் பூதத்துவ சாஸ்திரத்தைப்பற்றி அதிகமாகத் தெரிந்தார் என்று நான் நன்கு தெரிந்திருக்கிறேன். உலகப் பிரளயக் கதையைப் பற்றிச் சொன்ன மோசேயைவிட டார்வின் பெரியார் பெரிய இயற்கை சாஸ்திரி என்பது என் அபிப்பிராயம். யோசுவாவைவிட லாப்பேலஸ் என்ற அறிஞர் சூரிய சந்திர இயல்புகளைப் பற்றி நன்கு தெரிந்தவர் என்பது என் தீர்மானம், டின்டால் முதலிய பேரறிஞர்கள் பூமியைப் பற்றியும், நட்சத்திரங்களைப் பற்றியும், மாநிட சாஸ்திரத்தைப் பற்றியும், வாழ்க்கைத் தத்துவத்தைப்பற்றியும், மாநிட வர்க்கத்திற்கு இன்னும் அதிக உபயோகமான விஷயங். களைப்பற்றியும் பத்தாயிரம் மடங்கு அதிகமாகத் தெரிந்தவர்கள் என்பது என்னுடைய துணிபு.