நாடறிந்தோர் வாழ்வில்
நாடறிந்தோர் வாழ்வில்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
தன் இறுதிநாளில், ஒரு குடியானவன் இல்லத்தில் அவருக்கு அளிக்கப்பட்ட உணவில்தான் நச்சுக் காளான் கலந்திருந்த தென்று அறிந்த புத்தரின் சீடர் அந்த உழவனைத் தாக்கப் பாய்ந்தபோது, தன் உயிர்போகும் வாதை மிகுந்த அந்த நேரத்திலும், அன்புக்கே இலக்கியமான புத்தபிரான், “அந்த இனியவரைத் தாக்க வேண்டாம்; அதற்குப் பதில் அவருக்கு நன்றி கூறுங்கள்; ஏனெனில் அவர்தானே எனக்கு இறப்பின் இன்பத்தையும் காட்டினார்!” என்று நெகிழ்வுடன் கூறிய வரலாற்று நிகழ்வைப் பற்றியும் என் கவிதை கூறுகிறது. ஆக எதனால் அந்தச் சான்றோர் சரித்திரத்தின் எழிற்பக்கங்களில் ஒளிர்கிறார்கள் என்று எடுத்துக் காட்ட முனைந்திருக்கிறேன்.
'இப்படியும் மனிதர்கள் இருந்திருக்கிறார்களா? அவர்கள் இப்படியெல்லாம் வாழ்ந்து காட்டியிருக்கிறார்களா?' என்ற வியப்பும் ஐயமும் இந்த நூலைப் படிக்கும் இன்றைய தலைமுறையின் இளைஞர்க்கு எழத்தான் செய்யும்.