மொழிப்போர்
மொழிப்போர்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
இந்தியையும் இந்தியாவையும் எதிர்த்து 75 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் தொடுத்த போரின் வரலாறு.
பிரிட்டனிடம் இருந்து விடுதலை பெற இந்தியா மேற்கொண்ட போராட்டம் எந்த அளவுக்கு முக்கியமோ அந்த அளவுக்கு இந்தியிடம் இருந்து விடுதலை பெற தமிழகம் நடத்திய போரட்டமும் முக்கியம்.
மொழிப்போரில் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன என்ற போதும் இது ஆயுதந்தாங்கிய போர் அல்ல.
தமிழர்கள் மீது மத்திய அரசு வலுக்கட்டாயமாகத் திணித்த ஒரு அயல் மொழியை எதிர்த்து, தாய்மொழியாம் தமிழை முன்வைத்து நடத்தப்பட்ட ஒரு நீண்ட அரசியல் உரையாடல்.
காந்தி, நேரு, ராஜாஜி, பெரியார், அண்ணா, பக்தவத்சலம், மு. கருணாநிதி, பாரதிதாசன், ம.பொ.சி என்று தமிழக அளவிலும் இந்திய அளவிலும் மொழிபோருக்கு ஆதரவாகவும் எதிராகவும் குரல் கொடுத்த அரசியல் தலைவர்களும் படைப்பாளர்களும் கவிஞர்களும் அநேகம்.
உடன் ஆயிரக்கணக்கான மக்களும் இணைந்து கொண்டதால் தமிழகச் சரித்திரத்தின் மிக முக்கியமான ஒரு சமூக, சரித்திர நிகழ்வாகவும் மொழிப்போர் விரிவடைந்தது.
1938 தொடங்கி வெவ்வேறு காலகட்டங்களில் நிகழ்ந்த ஏழு கட்ட மொழிப் போரட்டங்களும் அன்றைய அரசியல் வரலாற்றுப் பின்னணியுடன் இதில் விவரிக்கப்பட்டுள்ளன.
திராவிட இயக்க வரலாறு, தமிழக அரசியல் வரலாறு வரிசையில்
ஆர். முத்துக்குமாரின் அடுத்த முக்கியப் படைப்பு இது.