Skip to product information
1 of 2

கருப்புப் பிரதிகள்

மெல்ல முகிழ்க்கும் உரையாடல் - கட்டுரைகள்

மெல்ல முகிழ்க்கும் உரையாடல் - கட்டுரைகள்

Regular price Rs. 70.00
Regular price Sale price Rs. 70.00
Sale Out of Stock
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

திருச்செந்தூரில் பிறந்து ஈரோடு பெருந்துறையில் வசித்துவரும் கவிஞர் ம.மதிவண்ணன் கலை இலக்கிய பெருமன்றத்தின் வழியே இலக்கியத்திற்குள் அறிமுகம் செய்து கொண்டவர். ‘நெரிந்து’ கவிதைத் தொகுப்பின் மூலம் தமிழின் முக்கிய கவிஞர்களில் ஒருவராக அறிமுகமானவர். இவர் எழுதிய கவிதைகள் “நமக்கிடையிலான தொலைவு” வெளிச்சங்களை புதைத்த குழிகள்” “ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா”.

இவரின் “மெல்ல முகிழ்க்கும் உரையாடல்” என்னும் கட்டுரை தொகுப்பும் “சாதி எதிர் வர்க்கம்”, “எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள்” மொழியாக்க நூல்களும் வெளிவந்துள்ளது. தலித்களுள்ளும் மோசமான ஒடுக்குமுறைக்குள்ளாகி வரும் அருந்ததியர்களின் நிலையிலிருந்து தமிழ்ச்சூழலின் நிதழ்வுகளை கூர்மையாகப் பார்ப்பவர், விமர்சிப்பவர். அருந்ததியர்கள் ஆலயத்துக்குள் சென்று செருப்பைக் காணிக்கையாக்கி. வழிபட்ட செய்தியை 122 ஆம் ஆண்டின் திருவண்ணாமலை கோவில் கல்வெட்டு ஒன்று தெரிவிக்கிறது. அத்தகைய அருந்ததியர்கள் இன்று மலமள்ளிகளாகத் துப்புரவுப்பணியாளர்களாகச் சீரழிந்துப்போயிருப்பதுதான் இன்றைய எதார்த்தம். அயோத்திதாசப் பண்டிதரின் பார்வைகளுங்கூட பார்ப்பனீயத் தன்மையுடையதாகவும் அருந்ததியர் உள்ளிட்ட பல தலித் பிரிவுகளை இழிவு செய்வதாகவும் உள்ளன என்கிறார். பெரியாரைத் தலித்துகளின் எதிரியாக சித்தரிக்க முயலுதல் குறித்தும், சமகாலப் பிரதிகள் சிலவற்றின் மீதும் அவர் முன்வைக்கும் பொறிகிளப்பும் சிந்தனைகள் கடும் சர்ச்சைகளையும் விவாதங்களையும் ஏற்படுத்தக்கூடியவை.

நாம் மவுனமாக்கப்பட்டுக் கொண்டும், போராட்ட உணர்வூட்டப்பட்டுக் கொண்டும் வருகிறோம். உலகமயம் – பார்ப்பனர் மற்றும் ஆதிக்க சாதி தவிர்த்த இந்தியச் சமூகமனைத்திற்கும் சவாலாகி வருகின்ற தருணத்தில் ‘உள்ஒதுக்கீடு’ என்கிற அடிப்படைக் கோரிக்கை முழக்கத்தை முன்வைத்து அருந்ததியர்கள் எழுத்துகளும், கொடிகளுமாய் களத்தில் நிற்கும் போது, நாம் என்ன செய்யப் போகிறோம் என்கிற ‘பெரியாரிய’க் கேள்விகள் துளைத்தெடுத்துக் கொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் வகுப்புவாரி பிரதிநிதித்துவ கோரிக்கையை காலனியச் சூழலிலேயே முன்வைத்து, வெறும் இடஒதுக்கீடாக சுருங்கிப் போய்விட்ட பெருமைக்குரிய மாநிலம் நமது தமிழ் நாடு, வகுப்பிவாரி கோரிக்கையின் அடிப்படையான சாதிவாரி கணக்கெடுப்பையும் சாத்தியமாக்கியிருந்தால், உள்ஒதுக்கீடு இன்றைக்கு எழுப்ப வேண்டிய கோர்க்கையாய் இருந்திராது. பார்ப்பனர்கள் இடஒதுக்கீடுக்கெதிராக      வைத்த மிக மோசமான வாதங்களை இன்று டாக்டர் கிருஷ்ணசாமியும், செ.கு.தமிழரசனும் அருந்ததியர்களுக்கான உள்ஒதுக்கீடுக்கு எதிராக முன்வைத்து வருகின்றனர். இந்த எதிர்ப்பு அரசியலின் அத்தனை வாதமுனைகளையும் தர்க்கப்பூர்வமாகவும், வரலாற்றுப்பூர்வமாகவும் அம்பேத்கரிய – பெரியாரிய அணுகுமுறையில் உடைத்தெறிகிறார் கவிஞர் மதிவண்ணன்.

View full details