திராவிடர் கழகம்
மதவெறியும் மாட்டுக்கறியும்
மதவெறியும் மாட்டுக்கறியும்
Regular price
Rs. 40.00
Regular price
Sale price
Rs. 40.00
Unit price
per
Shipping calculated at checkout.
Couldn't load pickup availability
இந்தியாவில் மாமிச உணவு சாப்பிடுகிறவர்கள் சராசரியாக 70 சதவீதம் பேர் சாப்பிடுகிறார்கள். இதிலே மாட்டிறைச்சி என்பது. மிகக் குறைந்த விலையிலே கிடைக்கக்கூடிய புரதச்சத்து உணவு. உழைக்கும் வர்க்கமான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், மற்ற இறைச்சியை விலை கொடுத்து வாங்க முடியாமல், பொருளாதார சிக்கலில் உழன்று கொண்டிருக்கும் நிலையில், அவர்களுக்குக் குறைந்த விலையில் கிடைத்து வந்த ஒரே சத்துணவையும் தடை போட்டு அபகரிப்பது எந்த வகையில் நியாயமாகும்? மதரீதியாக கோமாதாவுக்கு கொடிபிடிக்கப் புறப்பட்டிருப்பவர்களைக் கேட்கிறோம், வேதங்களிலும், மனுஸ்மிருதிகளிலும், இதிகாசங்களிலும், பசுவதை ஆதரிக்கப்பட்டிருக்கிறதே. இல்லை என்று மறுக்க முடியுமா? கோமேதயாகம் என்பதே, பசுவைக் கொல்வது தானே! இல்லை என்று கூற முடியுமா?
