மதமும் பகுத்தறிவும்
மதம் என்பது உணர்வற்ற மக்களின் உணர்வாக இருக்கிறது, இதயமற்ற உலகத்தின் இதயமாக இருக்கிறது. ஒடுக்கப்பட்ட மக்களின் வேதனைப் பெருமூச்சுதான் மதம். அதே சமயத்தில் அந்த , வேதனைக்கு எதிரானதாகவும் மதம் இருக்கிறது. மதம் மக்களுக்கு , அடபின்.மக்களுக்குப் போலியான மகிழ்ச்சியைத் தருகின்ற மதத்தை ஒழித்துக் கட்டுவது, அவர்களுடைய உண்மையான மகிழ்ச்சிக்கு அவசியமானதாகும். மதத்தின் மீதான நாட்டத்தை ஒழிக்க வேண்டுமென்றால், மதம் இருந்து வருவதற்கு அடிப்படையான சமூக நிலைமைகளை மாற்ற வேண்டும். எனவே, மதத்தைப் பற்றிய விமர்சனம், துன்பக்கடலைப் பற்றிய விமர்சனத்தின் மறுவடிவம் ஆகும். நீதி நெறி, தார்மீக உணர்வு, அன்பு, பாசம் ஆகிய உணர்வுகள் கட வுளின் மீதுள்ள அச்சத்திலிருந்துதான் உண்டாகின்றன என்பது பலருடைய நம்பிக்கையாகும். இந்த நம்பிக்கை தவறானது , என்பதற்குச் சான்றுகள் இயற்கையி லே யே உள்ளன. குரங்கு தன்னு டைய குட்டியை அருமையாக அணைத்து முகத்தில் முத்தமிட்டு அன்போடு பாலூட்டுவதும், எறும்புகள் ஆபத்தில் சிக்கிய சக எறும் பைத் தாங்கிக் கொண்டு ஓடுவதும், காகத்தின் கூட்டில் கல்லை யெறிந்தால் ஒன்றுபடுகின்ற பண்பும் கடவுளின் மீதுள்ள அச்சத்தால் உண்டாவதல்ல...