மார்க்சிய அழகியல்:நா. வானமாமலை
மார்க்சிய அழகியல் :
மார்க்சிய அழகியல் தத்துவம், மார்க்சிய அறிதல் முறைத் தத்துவத்திலிருந்து உருவாக்கப்பட்டது. ‘அறிதல் முறைகளை’ சுரண்டும் வர்க்கத் தத்துவங்கள், தங்கள் நலன்களைப் பாதுகாக்க உருவாக்கியிருந்தன. தொழில் புரட்சியின் அமோக வளர்ச்சியினாலும், விஞ்ஞானப் புரட்சியின் தோற்றத்தாலும் உற்பத்திச் சக்திகள் பிரம்மாண்ட வளர்ச்சி பெற்றன. இதனால் சிந்தனைகள் மாறின.
இம்மாற்றம் சிந்தனைப் போராட்டங்களைக் கூர்மையாக்கியது.
படைப்பாளிகள் தமது படைப்பில் உருவம் உள்ளடக்கம் இரண்டிற்குமான கொள்கைகளில் எவ்வாறு சமூக இயக்கத்தை வெளிப்படுத்துகிறார்கள் என்பதை மார்க்சிய கண்ணோட்டத்தில் இந்நூல் புரியவைக்கிறது.
பகற்கனவுகளைத் தோற்றுவிக்கிற இலக்கியங்கள் பயனற்றவை. வாழ்க்கையை மேன்மையும் சிறப்பும் உடையதாக மாற்றவல்ல இலக்கிய குறிக்கோள்களே பயனுள்ளவை.முதலாளித்துவ நச்சு இலக்கியவாதிகள் பரப்பியுள்ள பிரச்சாரம் மிகவும் ஆபத்தானது. உலக இலக்கிய வானத்தையே அசுத்தப்படுத்தி, மக்களின் நேர்மையான, ஆரோக்கியமான மனிதத் தன்மையையே அழித்துவிடும்.
எனவே சமூகத்தின் மீது அக்கரைகொண்ட படைப்பாளிகள் மார்க்சிய அழகியல் கொள்கையைப் புரிந்து கொள்ள பல்வேறு வரலாற்று நிகழ்வுகளையும், புகழ்பெற்ற படைப்பாளிகளின் படைப்புகளையும் விமர்சனப் பூர்வமாக அணுகவேண்டும் என்பதே இந்நூலின் சாரம்.