Skip to content
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000
10% Discount on all books until Jan 19 2025 | Free Shipping on Orders over Rs.1000

மறைக்கப்பட்ட மாமனிதர்கள்

Original price Rs. 220.00 - Original price Rs. 220.00
Original price
Rs. 220.00
Rs. 220.00 - Rs. 220.00
Current price Rs. 220.00

சுமார் 750 ஆண்டுகளுக்கு முன் பெரியார் கொள்கைகளை முன்னெடுத்து (கடவுள் நம்பிக்கை தவிர ) அவருக்கே வழிகாட்டியாக வாழ்ந்து புரட்சி செய்த பெம்மான் பசவர் முதற்கொண்டு, அயோத்திதாசர், இரட்டைமலை சீனிவாசன் உட்பட தம்பிக்கோட்டை கணபதி வரை மாபெரும் மனிதர்களை இன்றைய தலைமுறைக்கு அறிமுகப் படுத்தி விழிப்பும் எழுச்சியும் ஊட்டும் நூல்.

மனிதன் தான் கொண்ட கொள்கைகளில் இருந்து பிறழாமல் இருப்பதற்குப் பெருமுயற்சி செய்ய வேண்டும். வருங்காலத்தில் என்ன நடக்கும் என்பதை யாரும் சொல்ல முடியாது. நான் உன்னுடைய சிந்தனைக்குக் கொண்டு வர விரும்பும் கருத்து ஒன்று உள்ளது. கடவுளிடத்திலோ, சொர்க்கம், நரகம், தண்டனை..! வெகுமதி என்பனவற்றிலோ நமக்கு நம்பிக்கையில்லை. ஆகவே, பொருள்முதல்வாத பார்வையின்படியே நாம் வாழ்வையும், இறப்பையும் பற்றிச் சிந்திக்க வேண்டும். நம்மைப்போல் கொள்கைகளும், கோட்பாடுகளும் உள்ள ஒரு மனிதன், பயனின்றி இறந்து போவதை ஒருபோதும் நினைத்துப் பார்க்க முடியாது. நம்முடைய உயிருக்கு அதிகப்பட்ட மதிப்பைப் பெறவே நாம் விரும்புகிறோம். குறிப்பாக வாழ்க்கையின் எந்த இடத்திலும் துன்பமோ, வருத்தமோ இல்லாத நம்மைப் போன்றவர், தற்கொலையைப் பற்றி ஒருபோதும் நினைத்துப் பார்க்கவே முடியாது. இயன்ற மட்டும் மக்களுக்காகச் சேவை செய்ய விரும்புகிறவர்கள் நாம். நமக்கு இந்த எண்ணங்கள் வரக்கூடாது.