மந்தை மாந்தர்கள்
தனிமனிதத் தேர்வுகளும், சமூக இலக்கணங்களும் எந்நேரமும் போரிட்டுக்கொண்டே இருக்கின்றன! சமூக நிந்தனைக்கு பயந்தும், இல்லை இந்தக் கூட்டம் தன்னை ஒதுக்கி தனியாக நிற்க வைத்துவிடுமோ என்ற அச்சத்திலும் பெரும்பான்மையான தனிமனிதர்கள் இந்தப் போரில் காலங்காலமாகத் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள். சமூகம் என்ற சொல்லே தனிமனிதர்களின் கூட்டத்தைக் குறிக்கும் சொல்லாக இருக்கையில் தனிமனிதர்கள் தோல்வியுறும் போரில் சமூகம் எப்படி வெற்றி காண இயலும்?
ஒவ்வொரு தனிமனிதரும் தனக்குள்ளேயே பிளவுபட்டுக் கிடக்கையில் சமூக ஒற்றுமை என்பது கானல் நீரே! இதைப்பற்றி சிந்திக்கவும் விவாதிக்கவும் தேவை இருக்கிறது. அதனால்தான் இந்தப் புத்தகம் எழுத வேண்டிய ஒரு கட்டாயம் எனக்குள் உந்துதலாக ஏற்பட்டது.
வாழ்கை வாழ்வதற்கே இல்லையா?
அன்பும் நன்றியும்.
* லதா
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.