Skip to product information
1 of 2

திராவிடர் கழகம்

மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்

மண்டல் குழுவும் திராவிடர் கழகமும்

Regular price Rs. 240.00
Regular price Sale price Rs. 240.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.

மண்டல்குழு அமைக்கப்பட்டது முதல், பிரதமர் வி.பி.சிங் 7.8.1990 அன்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்திடும் ஆணை பிறப்பித்தது வரையிலும், பிறகு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது முதல் 1993 அன்றைய பிரதமர் நரசிம்மராவ் அரசின் சமூக நலத்துறை அமைச்சர் சீதாராம் கேசரி ஆணை பிறப்பித்தது வரையிலும், தொடர்ந்து திராவிடர் கழகம், மாநாடுகள், பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள் என தமிழ்நாடு முழுவதும் நடத்தியது. இந்தியாவிலேயே, மண்டல் குழுப் பரிந்துரையை அமல்படுத்தக் கோரி 42 மாநாடுகளையும், 16 ஆர்ப்பாட்டங்களையும் நடத்திய ஒரே இயக்கம் திராவிடர் கழகம் மட்டும்தான்.

எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி ஆயிரக்கணக்கில் திராவிடர் கழகத் தொண்டர்கள், தலைவர் இட்ட கட்டளையை ஏற்று நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்தினர், கைதாகினர். தமிழ் நாட்டைத் தாண்டி, புது தில்லியில், பிரதமர் வீடு முன்பாக திராவிடர் கழகத் தலைவரின் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தி தில்லி திகார் சிறை சென்றனர். திராவிடர் கழகம் ஆற்றிய பணிகள், போராட்டங்கள், ஆண்டுவாரியாக இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன

View full details