
மல்லி
சேலம் மாவட்டக் கிராமம் ஒன்றில் விவசாயக் குடும்பத்தில் பிறந்தவர் சரசுவதி. கோவை நிர்மலா கல்லூரியிலும், அண்ணாமலை, சென்னைப் பல்கலைக்கழகங்களிலும் பயின்றவர். தமிழ்நாடு அரசுக் கல்லூரி கல்விப் பணியில், தஞ்சையிலும் சென்னையிலும் பணியாற்றியவர். சென்னை இராணிமேரிக் கல்லூரியின், சமூக அறிவியல் துறையின் மேனாள் தலைவர். தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம், தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் மன்றம் ஆகிய அமைப்புகளில் பொறுப்பு வகித்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்தின் கல்விக்குழு உறுப்பினராகவும், செனட் உறுப்பினராகவும் செயல்பட்டவர். பெரியாரின் பெண்ணுரிமைக் கருத்துக்களிலும், பொதுவுடைமைச் சிந்தனைகளிலும் பெரிதும் ஈடுபாடு கொண்டவர். மனித உரிமை ஆர்வலர் மற்றும் செயல்பாட்டாளர். புதினம் என்ற வகையில் இதுவே அவருடைய முதல் படைப்பு.
புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.