மக்களின் அரசமைப்பு சட்டம்
மக்களின் அரசமைப்பு சட்டம்
Regular price
Rs. 400.00
Regular price
Sale price
Rs. 400.00
Unit price
/
per
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
1920–களிலிருந்தே எல்லா முக்கிய இந்திய மொழிகளிலும் அரசமைப்பு பற்றிய விவாதங்கள் செய்தித்தாள்களின் தலைப்புச் செய்திகளில் அதிகம் இடம்பெற்றிருந்தாலும்கூட 1946–ஆம் ஆண்டு அதை வரைவுசெய்யும் பணி மேற்கொள்ளப்பட்ட பிறகுதான் நாடு முழுவதும் ஆா்வம் ஏற்பட்டது. பள்ளிச் சிறுவா்களிலிருந்து இல்லத்தரசிகள்வரை அரசமைப்பு வரைவுக்கு உரிமைகள் கோரி, தேவைகளைச் சொல்லி, ஆலோசனைகள் வழங்கி, தந்திகளையும் அஞ்சலட்டைகளையும் மனுக்களையும் அரசமைப்புச் சட்டமன்றத்துக்கு அனுப்பினர். மக்கள் மீது அரசமைப்புச் சட்டம் ஆதிக்கம் செலுத்தவில்லை. மாறாக, அது மக்களின் அன்றாடச் சந்திப்புகளில் உண்டாக்கப்பட்டு, மீண்டும் உருவம் பெற்றது. இந்திய விடுதலையின் தொடக்க நாட்களிலிருந்தே குடிமக்களின் அரசியல் செயல்பாடு நீதித் துறையில் தாக்கம் ஏற்படுத்திற்று. மேலும், சாதாரண மக்கள் தொடர்ந்த பொதுநல வழக்குகள் நீண்ட வரலாற்றை உடையவை. அவைகூட நீதிமன்றங்கள் தாமே கொண்டுவந்தவை அல்ல; மக்களின் முயற்சியால் வந்தவை. இவற்றை நாம் விரிவாகப் பார்க்கப்போகிறோம்.