பூம்புகார் பதிப்பகம்
மகேந்திரவர்மன்
மகேந்திரவர்மன்
Couldn't load pickup availability
ஒவ்வொரு நாட்டுக்கும் அந்தந்த நாட்டின் வரலாறுகள் மிகவும் முதன்மையாகும். ஆனால், வரலாற்று நால்களை எழுதும் வழக்கம் நமது நாட்டிலே பண்டைக் காலத்தில் இருந்ததில்லை . ஆகவே, நமது நாட்டுப் பழைய வரலாறுகள் நமக்குக் கிடைக்கவில்லை, முஸ்லீம்களும் ஐரோப்பியரும் வரலாற்று நூல் எழுதும் வழக்கமுடையரா யிருந்தனர். ஐரோப்பியர் நமது நாட்டிற்கு வந்த பின்னரே, வரலாறு எழுதும் வழக்கம் நமக்கு ஏற்பட்டது. அண்மைக்காலத்திலே மேல்நாடுகளில் ஆர்க்கியாலஜி, எபிகிராபி' சாத்திரங்களின் மூலமாக வரலாற்று ஆராய்ச்சி முறை பெரிதும் வளர்ச்சியடைந்திருக்கிறது. இந்த நூல்களின் மூலமாகப் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் மறைந்துபோன எகிப்தியர், பாபிலோனியர், யவனர் (கிரேக்கர்), உரோமர் முதலான பழங்கால மக்களின் வரலாறுகளும் நாகரிகங்களும் இப்போது கண்டறியப்பட்டுள்ளன.

