Skip to content
Free Shipping on Orders over Rs.1000 (India)
Free Shipping on Orders over Rs.1000

குதர்க்கம்

Original price Rs. 350.00 - Original price Rs. 350.00
Original price
Rs. 350.00
Rs. 350.00 - Rs. 350.00
Current price Rs. 350.00

இந்தியப் புரட்சியின் இன்றைய காலகட்டம் 'மக்கள் ஜனநாயகப் புரட்சி' காலகட்டமென அறிவுப் பூர்வமாக நம்புகிறவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சியை நேசிப்பவன்... வயதான தாய்-தந்தையை விட, பெற்ற குழந்தைகளை விட (தேவை இருந்ததா?) புரட்சியை உயர்வாக நேசித்தவன்... மக்கள் ஜனநாயகப் புரட்சிக்கு வர்க்கத்தை அணிதிரட்டும் முயற்சியில்... சென்னை நகர குடிசைப் பகுதிகளில்... குறிப்பாக இளைஞர், மாணவர் மத்தியில் பணியாற்றியவன்... மக்கள் ஜனநாயக முன்னணி அணிதிரட்டுதல் இன்னும் சாத்தியப்படவில்லை. சாத்தியப்பாட்டுக்கான அறிகுறிகள், தொலைவிலும் தென்படவில்லை. 'மக்கள் ஜனநாயக முன்னணி' மங்கலான ஆவணக் கோடுகளாகவே தொடர்கிறது. இடைக்கால அணியாக அறிவிக்கப்பட்ட, நடைமுறைத் தந்திரத்தின் இலக்காக அறிவிக்கப்பட்ட இடது மற்றும் ஜனநாயக முன்னணியும் சாத்தியப்படவில்லை. அது, கனவு முன்னணியாகவே தொடர்கிறது.  ஆகவே, 'குதர்க்கம்'. 'குதர்க்கம்' விரக்தியின் புலம்பல் என முடிவுக்கு வரலாகாது. ஏன் சாத்தியப்படவில்லை? கேள்வியை நடைமுறைத் தொடர்பிலிருந்து அணுகும் முயற்சியே 'குதர்க்கம்'. 

புத்தகம் 5 - 10 வேலை நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.