குறளும் கீதையும்:Arulmozhi|பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
குறளும் கீதையும்:Arulmozhi|பேராசிரியர் சுப.வீரபாண்டியன்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
குறளும் கீதையும்
அர்ஜுனன் போர்க்களத்தில் போர் புரிய மறுத்தது அகிம்சையின் மீது கொண்ட பற்றுதலாலா? இல்லை, உறவினர்களோடு போர் புரிய வேண்டுமே என்கிற எண்ணத்தினாலா? இரண்டும் இல்லை. அர்ஜுனன் போர்புரிய மறுத்ததற்குக் காரணம் “வர்ண சங்கரகம்”. வர்ண சங்கரகம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்ள நீங்கள் படிக்க வேண்டிய நூல் ‘குறளும் கீதையும்’ ! “கொலை செய்” என்று சொல்லும் கீதையும் “அன்பு காட்டு” என்று சொல்லும் குறளும் ஒன்று, என்ற புரட்டிற்குப் பதிலடியாக வெளிவந்துள்ளது இந்த நூல். குறளின் காலம் என்ன? கீதையின் காலம் என்ன? இரண்டிற்கும் உள்ள அடிப்படையான வேறுபாடுகள் என்ன? மகாபாரதத்தின் கதாநாயகர்களாகக் காட்டப்படும் பாத்திரங்கள் எவ்வளவு போலியானவை? அவற்றின் யோக்கியதை என்ன? பெண்மையைப் பகவத்கீதை எவ்வாறெல்லாம் களங்கப்படுத்தி இருக்கிறது? குறள் எவ்வாறு கீதைக்கு நேர் எதிரானது? அனைத்துக் கேள்விகளுக்குமான விடையினை “குறளும் கீதையும்” நூலில் நீங்கள் காணலாம்.