கேரளாவில் பெரியார்
நான் ஓர் இந்துவாகச் சாக மாட்டேன்; இந்துமதத்தை விட்டு வெளியேறி விடுவேன் என்று 1935 ஆம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் அறிவித்தபோது, அண்ணலின் முடிவிற்கு ஆதரவு தெரிவித்து அவருக்கு அனுப்பிய தந்தியில்,
தாங்கள் புத்திசாலித்தனமான முடிவுக்கு வந்தது பற்றி வாழ்த்து கூறுகின்றேன். தங்களது முடிவை எக்காரணத்தாலும் மாற்ற வேண்டாம் என்று கூறிவிட்டு மலையாளம் உட்பட தென்னிந்தியா தங்களது முடிவுக்கு பலத்த ஆதரவு அளிக்கும் என்று பெரியார் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்நாடு மட்டுமின்றி கேரளாவும் தன் செயல்பாட்டுத் தளம் என்பதை இதன்மூலம் தந்தை பெரியார் வெளிப்படுத்துகிறார்.
தந்தை பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டிருக்கும் நூல் இது. கேரள பகுதிகளில் பெரியார் ஆற்றிய பணிகள் குறித்த அரிய பல கட்டுரைகளை தொகுத்திருக்கிறார் தோழர் கா.கருமலையப்பன்.கேரளத்தில் நடந்த பொதுக்கூட்டங்கள். மாநாடுகளில் பெரியார் பங்கெடுத்துக் கொண்டு அம்மக்களிடம் செய்த சுயமரியாதைப் பிரச்சாரத்தையும் அப்பிரச்சாரத்தின் விளைவாக நிகழ்ந்த மாற்றங்கள் குறித்தும் குடி அரசு இதழில் வெளியான செய்திகளைத் தொகுத்து வெளியிடுகிறோம்.
புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.