Skip to content
Free Shipping on Orders over Rs.1000
Free Shipping on Orders over Rs.1000

கதவு திறந்ததும் கடல்

Original price Rs. 160.00 - Original price Rs. 160.00
Original price
Rs. 160.00
Rs. 160.00 - Rs. 160.00
Current price Rs. 160.00

Her stories publication

கதவு திறந்ததும் கடல் -  பிருந்தா சேது :

கூட்டுக் குடும்பங்கள் உடைந்து தனிக் குடும்பங்களாகி அவையும் உடைந்து உதிரி மனிதர்களாக நிற்கிற காலம் இது. இந்தக் கால மாற்றம் தவிர்க்கமுடியாதது.

போன தலைமுறை அம்மா அப்பா பிரிய மாட்டார்கள் ஆனால், அவ்வளவு சண்டை போடுவார்கள். கொண்டாட்டமான அம்மா அப்பாவையோ குதூகலமான குடும்பத்தையோ பார்க்க முடியாது.
நல்லவேளையாக குடும்பச் சண்டைகளின் விஷம் குழந்தைகளை பாதிக்க விடாமல் இப்போதெல்லாம் பிரிந்து விடுகிறார்கள்.
ஆண்கள் பெரும்பாலும் வீட்டில், குழந்தை வளர்ப்பில் பொறுப்பெடுப்பது இல்லை. சிங்கிள் பேரண்டிங்கிலும், ஆண்களின் அம்மா அக்கா தங்கைதான் குழந்தையை வளர்க்கிறார்கள்.
ஆனால் பொதுவாக பெண்களுக்கு அப்படி அல்ல.
ஒற்றைப் பெற்றோரின் (சிங்கிள் பேரண்ட்) பிரச்சினைகள், மனஅழுத்தங்கள் அவற்றை அவர்கள் எதிர்கொள்ள எந்த எந்த வழிகாட்டலும் இல்லாமல் திணறும் நிலை.
திருமணப் பிரச்சினைகள், தோல்விகள் எல்லாமே விபத்து போலத்தான். அடிபட்டு பாதிக்கப்படுவரே, விபத்திற்குப் பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும், தண்டனையும் அவருக்குத்தான் என்பது என்னவகை நியாயம்?
சிங்கிள் பேரண்டிங்'கின் கையேடாக, பலவகைகளிலும் நேர்மறையாகப் பிரச்சினைகளை அணுக இந்நூல் துணைபுரிகிறது.

புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.