கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்
கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
அணிந்துரை
கருவறை நுழைவும் சாதி ஒழிப்பும்" எனும் தலைப்பில் முனைவர் சிவப்பிரகாசம் ஒரு அருமையான நூலைக் கொண்டு வந்துள்ளார்.
தமிழன் தன் சொந்த நாட்டில் நாலாந்தர குடிமகனாக சூத்திரனாக, இந்து மத வருணாச்சிரம கோட்பாட்டின் காரணமாக ஆக்கப்பட்டான். அதன் விளைவுதான் தமிழன் கட்டிய கோயிலுக்குள் தமிழன் அர்ச்சகனாக முடியவில்லை .தமிழ் மொழி, வழிபாட்டு மொழியாகவும் ஆகிட முடியவில்லை .
இந்த நிலையை மாற்றி அமைப்பதற்குப் போராட வேண்டியிருந்தது என்பதேகூட வெட்கக்கேடானதுதான். இதற்காகத் தந்தை பெரியார் அவர்களின் தலைமையில் திராவிடர் கழகம் போராடிய நிலையில், தமிழர்களே தன்மான உணர்வுடன் கைகோர்த்து நிற்க முன்வரவில்லை என்பது அதனினும் வெட்கக்கேடு.
ஆனாலும், தமிழர் சமுதாய இழிவினை ஒழிக்கும் போரில் தொடர்ந்து கழகம் பாடுபட்டதன் பலன்தான் இன்றைக்கு தி.மு.க. ஆட்சியில் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், அமைச்சரவையின் முதல் கூட்டத்திலேயே முதல் அறிவிப்பாக அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்ற ஆணையாக வெளிவந்தது.
இதனை எதிர்த்து பார்ப்பனர்கள் உச்சநீதிமன்றம் சென்றுள்ளனர். பார்ப்பான்-சூத்திரன் பிரச்சனை இப்பொழுது எல்லாம் எங்கே என்று மேம்போக்காகப் பேசும் மனிதர்களின் கண்கள் இதற்குப் பிறகாவது திறந்தால் நல்லதே!
முனைவர் சிவப்பிரகாசம் அவர்கள் மிகச்சரியாக இந்த நூலை எழுதியிருக்கிறார்; கால வரிசைப்படி தகவல்களையும் அரும்பாடுபட்டுத் திரட்டித் தந்துள்ளார்.