கண்டேன் புதையலை (புதிய கல்விச் சிந்தனைகள்)
'கண்டேன் புதையலை’ வாசித்தேன். இது புத்தகம் மட்டுமா? இல்லை, இது வீட்டிலும், வீதியிலும், மேடையிலும், வகுப்பறையிலும் எங்கெங்கும்... விலகி விடுப்பட்டுத் தனித்திருப்போரைத் தேடும் கண். அவர்களைக் கூப்பிடும் குரல். ‘கண்டேன் புதையலை’ நூல் முழுக்க எத்தனை தகவல்கள்? எத்தனைபேருடைய வாழ்க்கைக் குறிப்புகள்? வியந்தேன். புதிய கல்விச் சிந்தனைகளை எளிய தமிழில் தந்துள்ள இந்நூல் கல்வித்தளத்தில் பெரும் வரவேற்பினைப் பெறும். - ச.மாடசாமி கல்வியாளர்
குழந்தைப் பருவத்திலிருந்து பதின் பருவம்வரை நாம் கற்கும் விஷயங்கள் தான் நம் வாழ்வின் ஆதாரம் எனும்போது அத்தகைய மிக முக்கியமான விஷயத்தை ஒரு பிரம்பின் கீழ் வைத்து அதிகாரத்தின் கூர் முனை கொண்டு செலுத்தப்பட்ட மந்தைகள் போல் அல்லாமல் குழுந்தைகளுக்கு இயற்கையாக அமைந்துள்ள ஆர்வத்தையும், அவர்தம் தனித்திறனையும் ஒருங்கிணைத்து கற்றலை மகிழ்ச்சியான ஒரு நிகழ்வாக்கிக் கொண்டாட இது போன்ற நூல்கள் அவசியம். தலைமைப் பண்பு முதல் தியானம்வரை பல கடினமான விஷயங்களை எளிமையான மொழிநடையில் விளக்கி எல்லையில்லா கற்றலுக்கு அழைத்துச் செல்லும் நூல் ‘கண்டேன் புதையலை’. - உமா பார்வதி தினமணி.காம்