Skip to product information
1 of 2

பாரதி பதிப்பகம்

கலைஞர் உலாவும் சந்தனத் தேவன் கட்டுரைகளும்

கலைஞர் உலாவும் சந்தனத் தேவன் கட்டுரைகளும்

Regular price Rs. 20.00
Regular price Sale price Rs. 20.00
Sale Coming Soon
Shipping calculated at checkout.
  • புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
சந்தனத் தேவனின் சிறுகதைகள் - சின்னஞ்சிறு 19 கதைகள். அழுத்தமான கருக்கள்; ஆழமான பாத்திரங்கள், தங்கள் உணர்வுகளைப் பிசிறின்றிச் சொல்லும் பாத்திரங்களே இச்சிறுகதைத் தளத்துக்குத் தூண்கள்.
அடுத்தடுத்து வந்து விழும் வட்டார வார்த்தைப் பிரயோகங்கள். எல்லாச் சிறுகதைகளிலும் சமூகத்துக்கு ஏதாவதொரு செய்தி சொல்லும் 'நச்' சென்ற முடிவு இவை சந்தனத்தேவனின் ஜனரஞ்சகத்தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. ஜாதி, மத துவேஷம் வேண்டாம் என்று சொல்லும் சிறுகதைகள், லஞ்சம் இல்லாதிருந்தால் நெஞ்சம் சுத்தமாயிருக்கும் என்ற கருத்தோடு ஒரு சிறுகதை - ஆசிரியரின் சமுதாய அக்கறையைக் காட்டுகிறது. ஆனால், சொல்ல வந்தவற்றை ஒரு அவசரத்தோடு பகிர்ந்திருக்கும் பாவமும் வெளிப்படுகிறது. ஒரு வேளை சிறுகதை என்பதால் விரைவாய் நிகழ்ச்சிகளை நகர்த்தி விட்டார் போலும்.
'எனக்கு வந்த வலி பெரிது' சிறுகதையில் இழை யோடும் நகைச்சுவை ரசிக்கும்படி இருக்கிறது. ராமலிங்கம், ரெஜினா, பையீ, அன்னமுத்து, அரசப்ப பிள்ளை , சிவநேசன், சங்கரன் - ஆகியவர்கள் நிஜமனிதர்களாக உலா வருகிறார்கள்.
View full details