கலைஞரின் திரைப்பாயிரம்: மரபிலிருந்து துளிர்த்த புத்திளங்கன்று
கலைஞரின் திரைப்பாயிரம்: மரபிலிருந்து துளிர்த்த புத்திளங்கன்று
- புத்தகம் 3 - 5 நாட்களில் அனுப்பி வைக்கப்படும்.
கண்ணகி, கோவலன், பாண்டியன் என்பவர்கள் வரலாற்றில் வாழ்ந்த மனிதர்கள் என்றோ அல்லது ஒரு காப்பியத்தின் கதைமாந்தர்கள் மட்டுமே என்று பார்ப்பதற்கோ ஒவ்வொருவருக்கும் உரிமையுண்டு, ஆனால், 'பூம்புகார்' என்கிற துறைமுகப்பட்டினம்' ஒரு நிலமாக (Geography) இங்கேதான் இருந்தது என்று அந்தப் படத்தின் பாயிரத்தில் அறுதியிட்டுச் சொல்ல விரும்புகிறார் கலைஞர். அந்த அழுத்தம் 'அலெக்சாந்தர் கோந்தரதோவ்' எழுதிய இந்துமாக்கடல் கடலியல் அகழாய்வு நூலின் தாக்கத்திலிருந்தும், சிந்துவெளி முதல் ஆதிச்சநல்லூர் வரையிலுள்ள அகழாய்வுச் செய்திகளின் உறுதிப்பாட்டிலிருந்தும் அவருக்குத் தோன்றுகிறது என்று கணிக்கலாம்
இதே காலத்திலும், இதற்குச் சற்று முந்தைய காலத்திலும் கலைஞர் வெளிப்படுத்திய 'திரைப்படம் சாராத' ஆக்கங்களில், பெரிதும் இந்தக் கருத்துகளின் மூலக் கூறுகளைப் பார்க்க முடிகிறது. "இந்தியா" என்கிற புது 'அரசியல் புனைவுக்குள்' மூழ்கடிக்க முடியாத வரலாறும் புவியியலும் கொண்டது 'தமிழ்நாடு' என்பது அவரது (மற்ற ஆக்கங்களில் வெளிப்படும்) துணிபுகளில் ஒன்று. அதையே 'சிலப்பதிகாரக் காப்பியத்தை' நவீனத் திரைக்கலைக்கு நீட்டித்துத் தமிழ்ப் பேசும் மக்களின் பொதுநினைவில் (Common memory) அதனை மீண்டும் உயிர்ப்புள்ளதாக மாற்ற வேண்டும் என்று விழைகிறார் என்பது புலப்படுகிறது.